Saturday, May 12, 2018

கிடுக்கிப் பிடிகள்

வெட்டியது மின்னலோ,வீச்சு அருவாளோ?
வெட்டியது வீழ்ந்திடின் வெட்டியான் வசமே!.
கொட்டியது சொல்லோ,சிந்திய பொருளோ?
கொட்டியது வலித்திடின் தேளின் பொருட்டே . 
முட்டியது கன்றோ கன்றதன் கொம்போ,
முட்டியது கொம்பெனின் முட்டியதால் முறிவே!
கிட்டாப் பொருளினை,கிறுக்குடன் விரட்டுதலும்,
ஒட்டாத உறவுகளை உயர்வாய் நினைத்தலும், 
முட்டாள் தனத்தின் முடிவிலா முனைவுகளே!   
வெட்டியது,கொட்டியது,முட்டியது,முடிவில்,
விட்டொழிக்க இயலா விலங்குப் பிடியே.
குட்டிக் கரணம் குறிவைத்து போட்டாலும்,
சிட்டுக் குருவிகள் சிதைந்ததோர் உலகில்,
சிட்டாகப் பறக்கும் சிந்தனையும் சிறையே. 
                                                           ப.சந்திரசேகரன் .  

1 comment:

  1. chithaivundathu chittukuruvikal enraalum sinthanai enralum pathippu manithanukkuthan...

    ReplyDelete