Monday, March 28, 2016

பொறுப்போடு காதல் !.

என் விழிகளின் தணலைத் திருடியபோது,
வியர்த்திருக்கும் உனக்கு.
காத்திருப்பு இல்லாத காதலில்லை;
கண்டவுடன் குளிரச் செய்ய,
காணும் விழிகள்,குளிர்சாதனப் பெட்டியோ,
பருகும் பனிக்கூழோ இல்லை.
உன் பதிவுகளைப் பார்க்கிறேன்;பிடித்திருந்தால்,
மீண்டும் மீண்டும் பிரவேசித்தால்,
தணலை நானே தணியச் செய்கிறேன்; .
காத்திரு அதுவரை. காரணம்,
காத்திருப்பு இல்லாத காதல் இல்லை .
                                                                     .சந்திரசேகரன்.

Friday, March 18, 2016

திருமணம் அன்றும் இன்றும்.

திருமணம் அன்றும் இன்றும் :-
===========================
பரிசம் போடவே பந்தலுண்டாம்  அன்று ;
பந்தக்காலின்றியே பல திருமணமாம் இன்று
முதலிரவு அன்றே முதலில் பேசினர் தம்பதியர் அன்று .
முதலிரவில் கூட பேசுவதற்கு ஒன்றுமில்லையாம் இன்று     ;
மூன்று நாள் கொண்டாட்டத்  திருமணமாம்  அன்று
மூன்று விருந்துக்கே  திண்டாட்டமாம்  இன்று .
கண்டவர் கலப்பராம் திருமணப் பேச்சில் அன்று .
கூடப் பிறந்தவரே குரல்கொடுக்க யோசிப்பர் இன்று.
மெய்யோடு  சிறப்பாய், சீர்வரிசை அன்று
கையில் மொய்யோடு  நீள்வரிசை இன்று.
நட்புக்கும் உறவுக்கும் நேரம் நிறைய உண்டு அன்று .
உட்புகுந்து வெளிவரவே நேரமில்லை இன்று .
வசதியில்லா வாழ்வில் கூடுதலே மண்வாசம்;
வசதியின் வேட்டையில் பணம் ஒன்றே பேசும்.
                                                                                              .சந்திரசேகரன்.


Friday, March 4, 2016

The Poetic Cardiologist.


How many hearts have I healed!
Why should my heart today,go out of rhythm,
Like a mad musician's,maddened drum?
The pains caused by one' own blood,
With pressures unfelt and unknown,
Are thumping on my vessels of hope.
Will the heart that belongs to me,
Take a holiday for a fatal pause?
Hearts are like hyacinths on flowing waters.
With rising waves,they waver and sink.
When a stitch not in time,fails to save the sinking ship,
The stoic shores will have to take the last loaded whip
And hail the terminal attack with a serene, stealing smile
Meeting memories of lives saved,in a trim, thoracic style.
                                                                                 P.Chandrasekaran.