Monday, July 27, 2020

Zoom Meeting

God called for a zoom meeting
To discuss the cranky COVID19.
He gave CORONA as ID
And 'Heal' as Pass word.
The pass word seemed to be
A mix up of the first three letters
Of Heaven and the last of Hell.
Humans across the world,
Hurried to sign up for the meet.
The haves as usual,had no issues
To log on to their myriad devices.
From their hideouts,they heaped
Praise on God and pleaded for a way out.
But the have nots raised their voices,
About poverty and starvation,
Surpassing the pressures of the pandemic.
God could see the slipshod strokes
Of Statistics on numbers of all kinds.
After all,God knows the actuals
Knocking at his doors,on a flash news basis.
God's concern is about the shrinking space
In Heaven and Hell,to accommodate
The souls of the dead,in a roaring row.
The soil is better placed to swallow bodies,
Than the space in Heaven and Hell, 
To put the souls to rest in peace or revolt.
God proposed a lockdown for Heaven
To prevent infection from new entrants.
But he let Hell remain open,like liquor shops
And shut down abruptly,the Zoom Meet.
P.Chandrasekaran.

Monday, July 20, 2020

விட்டுப்பிரிகையில்

விட்டுப் பிரிகையில் 
விட்டுக் கொடுப்பதை, 
விட்டுக் கொடுக்காது 
விட்டுப் பிரிவதோ? 
கெட்டுப் போகையில் 
கெட்டுப் போகாது, 
கெட்டிக் காரனாய் 
விட்டுப் பிரிவதோ? 
திட்டிய தீயோரை,
கொட்டம் அடக்கி 
பெட்டிப் பாம்பாக்கி 
விட்டுப்பிரிவதோ?
முட்டிய கன்றது 
முட்டிய மடிதனில் 
கிட்டாப் பாலென, 
கிட்டாப் புகழினை 
விட்டுப் பிரிவதோ?   
சட்டிப் பானையில் 
ஒட்டிய பருக்கையை 
தட்டி உடைத்தென, 
விட்டுப் பிரிவதோ? 
வட்டமாய் வரிசையாய் 
வாட்டிய வாழ்வினை, 
எட்டி உதைத்து 
விட்டுப் பிரிவதோ
வட்டியும் அசலுமாய் 
கொட்டிய பணமெலாம் 
கொட்டிச் சிரிக்கையில் 
விட்டுப்பிரிவதோ
பெட்டியில் பணமிலா 
பெருமிதக் களிப்பில், 
முட்டையின் ஒடென 
விட்டுப் பிரிவதோ?
எட்டாத் தொலைவினில் 
ஈட்டிடும் பிள்ளைகள் 
இறுதிச் சடங்கில் 
எட்டா வண்ணம், 
விட்டுப் பிரிவதோ?  
கட்டையில் போவதும் 
காரினில் போவதும் 
கெட்டியாய் உயிரினைப் 
பற்றிடா  உடலினை
'கெட்டியாய்ப் பிடி'யென 
தோளினில் சுமப்போர் 
அட்டையாய்ப் பற்றி 
அந்தமாய் வைத்திட, 
சட்டியை உடைத்தபின் 
விட்டுப் பிரிவதோ
ஒட்டிய உறவுகள் 
ஒட்டுதற் கஞ்சிட  
கெட்டதோர் நோயினால் 
கெட்டதோர் உடலென, 
வெட்டியான் தீண்டாமல் 
விட்டுப் பிரிவதோ?
 ப.சந்திரசேகரன் . 

Wednesday, July 15, 2020

கண்டம்

நீரில் கண்டமோ?,நெருப்பில் கண்டமோ?,
நோயில் கண்டமோ?,வாயில் கண்டமோ?,
ஊரினில் ஒவ்வொரு நாளும் உலவிடும், 
ஓய்ந்திடா உயிர்பலி,உலுக்கிடும் கண்டமே !

காவலில் கண்டமோ?ஏவலில் கண்டமோ? 
காரிருள் கடக்கையில் காலிடறிக் கண்டமோ?
ஆவலில் கண்டமோ?ஆருடக் கண்டமோ? 
ஓரிடம் ஒழியா ஊழ்வினைக் கண்டமோ? 

மத்தள இடியென மானுடம் சகிப்பது
மாரகம் தடுத்திடும் மரணப் போராம்!  
தத்தளித்தே தினம் தன்னுயிர் காத்திட,
போரிடும் பூமியில்,புதைது கண்டமே!

பாலியல் பலிகளும்,பாய்லர் பலிகளும்,
பாதாளச் சாக்கடை,பறித்திடும் உயிர்களும்,
சாலையில் சகஜமாய் சரிந்திடும் உயிர்களும், 
சேதாரம் கூட்டிடும் சிசறுக்  கண்டமே!

பாரினில் கண்டம் பலப்பல இரகமாம்; 
மாயமாய் வாழ்வினில் மடிவது எல்லாம், 
நேரிடைக் காட்சியாய் நெட்டிடும் நிகழ்வில்   
மாய்ந்திடும் மாந்தரின் மயிரிழைக் கண்டமே!
ப.சந்திரசேகரன் . 

Wednesday, July 8, 2020

Themes and Memes

If someone hits and runs,
Others run and hit the hitter.
Scuffles and ruffles are not new;
But they draw new dimensions 
From contexts of unknown hues.
A disease draconian has come here,
To let out a load of rage and rifts.
Hidden throes leave their hideouts,
Spinning suicides,homicides,
Co-morbid causalities in hospitals,
And custodial deaths,behind the curtain.
A couple of cops turn con men;
The common man conjures up justice.
Celebrities make their presence felt,
By condemning acts fit for condemnation.
While many take law into their hands,
Law takes its own usual course.
There is no let up in the lurking lowdowns,
Leave alone the rigmarole lockdowns. 
The employed languish at home;
The unemployed crowd the streets.
Closed theatres pose their vacant looks
As fully shot films,fail to fill the bill.
Disease is a serial killer of serials.
The stench of sanitizers sticks to rule.
Masked customers see through their eyes
But pay through their nose for everything.
While the routine has lost its hold,
Politics holds its routine,by force of habit.
Transport is tilting on its routes,in tandem.
Statistics is the set top box for simulations.
With frequent stints of our daily handwash,
Gods seem to have washed us off their hands.
There are many stories without themes,
Because themes exist in an influx of memes,
Filling the huge gaps between life and living.
There is life;but are we living it as usual ?
P.Chandrasekaran.

Friday, July 3, 2020

புதைகுழிகள்

உன் புகைப்பழக்கப் புத்தகத்தின்
பயன்படுத்திய பக்கங்கள்
நைந்துபோனதைப் பார்த்தாயா?
உன் மூச்சின் மூலதனம்
முழுவதுமாய் முடங்கிப்போனது;
உன் நுரையீரல் நூலிழையில்
நின்றுகொண்டிருக்கிறது.
உன் நிகோடின் நச்சு மணத்தை,
கொரோனா கொண்டாடுகிறது.

இழுக்கும் புகையின் இருட்டடிப்பால், 
இரத்தநாளங்கள் சுருண்டுபோகின்றன; 
பக்கெட் பக்கெட்டாய் நீரூற்றி
கைகளைக்  கழுவினாலும்,
உன் பாக்கெட்டில் சிகரெட்
உள்குத்தாய் உள்ளவரை,
நீரெல்லாம் விழலுக்கிறைத்ததே!

மூச்சை இழுக்கும் நுரையீரலுக்கும்,
ருசியை ஈர்க்கும் கல்லீரலுக்கும்,
புகையும் மதுவுமே புதைகுழிகள் !
பாட்டில் பாட்டிலாய் வாங்கு சரக்கு;  
சூட்டின் சுதியில் சோகம் பெருக்கு   ! 
அடுத்துக் கெடுக்கும் பழக்கம் அனைத்தும்,  
படுத்தும் நோயினால்,படுக்கைகள் கூட்டும். 
படித்துறை கடந்திடா நதியின் பக்குவம்,
படியை இடித்திடும் நீரின் கணக்காம்! 
கெடுத்திடும் எதனையும் சுட்டிக் காட்டலே,   
உடுத்தும் கவசமாய்,ஊனுயிர் காக்குமாம்.  
 ப.சந்திரசேகரன் .