Monday, December 30, 2019

பொற்காலக் கனவுகள்

            {இனிய புத்தாண்டு 2020}
வரலாற்றி னுள்ளே நதியொன்று ஓடும்
விரைந்திடும் நதிகள் வளைவுகள் தேடும் 
அரியதோர் வளைவுகள் ஆற்றல் கூட்டிட,
ஆயிரம் ஆண்டினை,பொற்கால மென்பர்.
பாயிரம்  புனைந்திடும் கவிகள் எவரும்,
வாய்மையின் வரிகள் மாற்றுவ தில்லை.
மாய வலையினில் பின்னிடும் அரசியல்
தூய்மைத் தரியினில் தூவிடும் சாயம்.

பொய்யிலா வாழ்வின் பொற்காலக் கனவுகள்,
மெய்யனத் தாயினை தழுவிடும் குழந்தையாய் 
வையத்துள்,வரலாற்று வேர்கள் ஊன்றிடும்.
இரண்டென ஆயிரம் ஆண்டுகள் கடந்தபின், 
திரண்டுப் பெருக்கயில்,இருபதும் னிக்கும்.
பரணியில் பேணும் பழமையின் பலமெலாம்
தரணியின் சரித்திரம் தகர்ப்போர் பலரையும் 
இரணியன் ஈட்டிய தூணுடைத்து வீழ்த்துமாம்
ப.சந்திரசேகரன் . 

Twenty Twenty

                  Happy New Year 2020.
T 20 is no cricket teaser,but a great cricket event.
It is a synoptic show of the creamy,cricket game,
Leaving solid memories of the Samsonite strokes.
'Twenty-20'fabricated word and number,as a film
That brought together,a cluster of cheering actors,
Frame by frame,scene by scene,in an action galore.
Twenty Twenty is not the cardinal number repeated;
It is a cardinal calendar,conceived to catapult hopes.

In the line of the winners of a game and a blockbuster,
Comes the twentieth anniversary of the new millennium,
That was born with the pangs of a bug,baffling its birth.
The bug was gone and a bunch of brand new bytes shone.
Ten by ten,the yeasty years have flown fleeting,in a flick,
Tracking now,to Twenty Twenty,for many a classic click.
     Note:- 
    yeastycharacterized by upheaval;restless and turbulent.
P. Chandrasekaran

 

Tuesday, December 24, 2019

Handy Christmas



                                 Merry Christmas to all.
{Courtesy to Alarmy Stock Photo}

Outstretched hands can ever receive 
To embrace excitingly,either in love,
Or in lovely and lovable brotherhood,
Enacting the power,to hold blindfold.

Open hands have nothing to hide
But may spread its wield to hold.
Closed hands could go this way
Or that way,with hidden hints of  
Treasures and twists,tucking thrills.

Christmas draws the aisles closer,to join 
Hand in hand,like baptism and the Bible. 
The music of bells meets the carols'core,
Like distant minds,dreaming in unison.

A pair of newborn hands clasp the crib,
As the parable of passionate belonging;
Open arms always auger the faith to face,
Friends and foes together,in a lock of love.
Handy Christmas holds us all,from above.
P. Chandrasekaran.

Tuesday, December 17, 2019

குடியுரிமை

விடியும் பொழுதில் 
வெளிச்சம் வேரூன்றும். 
பொழுது சாய்கையில், 
இருள் வெளிச்சத்தின் 
விழியகற்றி வேரறுக்கும். 
மீண்டும் மறுநாள் 
வெளிச்சம் வெகுண்டெழுந்து,
குடியுரிமை கொண்டாடும். 
வெளிச்சம் ஒரு வெள்ளாடு. 
வேடங்கள் அதற்கில்லை;
வாய்மையே வழிபாடு. 

மண்ணுக்கு நிறமுண்டு; 
மாறிடும் நிறத்திலும், 
மாற்றான்தாய் குணமில்லை. 
இருளை ஈன்றெடுத்து 
இரவு பாடிடுமாம்
நிறங்களின் இரங்கட்பா. 
மண்ணுக்கு மதமில்லை 
மார்தட்டும் மொழியில்லை. 
சாயும் அனைத்தையும் 
தாங்குமே யன்றி, 
வீசி எறிவதில்லை. 

உயிர்வாழ் இனங்களுக்கு, 
நிலமே உலகு; 
உலகே நிலம். 
பிறப்புக்கும் இறப்புக்கும் 
இடையே காண்பதெல்லாம், 
இனம்சார்ந்த இறுமாப்பு. 
கடந்து செல்லும் 
மாய வலைகளில், 
இடமிங்கே வலமாகி, 
வலியோரின் வன்புலத்தில், 
குலம்பெயர்க்க வழங்கிடுமாம் 
பிரித்தாளும் குடியுரிமை! 
ப.சந்திரசேகரன் 

Friday, December 13, 2019

முரண்டுகள் களைவோம்!

எறும்பை தண்டிக்க இ.பி.கோ வோ?
குறும்புக் குழந்தையை கோடரி வீழ்த்தவோ?
இறம்பக் கொத்தித்திடின் இனிமையும் வேகுமே;
முறம்பல கொண்டு முரண்டுகள் களைவோம்!

கறுவுதல் கடைவோர் உறவுகள் உதிர்ப்பர்;
திறந்த மனதிற்கு தெருவெலாம் உறவே!   
பறந்திடும் சிறகுன் பாசமும் பறந்திட,
இறந்திடும் வேளையில்,ஈக்களே உறவாம் .
   
மறந்ததோர் பகைமை,முரண்டுகள் முறித்திட,
சிறந்ததோர் மருந்தென மறதி  நோய்போக்குமே!
கறந்திடும் பாலினில் திரண்டிடும் சுவையென, 
குறைந்திடா குணமது குருத்துடன் தென்னையாம். 

மறம்பினைக் காட்டிட மறப்போர் புரிபவர், 
வெறும்புலம் வென்றிட,முரண்டுகள் பிடிப்பர்; 
அறம்பல பாடியும் அழிவினில் திளைப்போர், 
அறம்புற மாக்குமுன்,முரண்டுகள் களைவோம்! 
ப.சந்திரசேகரன் . 

Thursday, December 5, 2019

வெங்காயம்

பொய்யான காயத்தில் ,
மெய்யன மணக்கும், 
பழைய சோற்றின் 
புதிய அத்தியாயம். 
பெரியாரின் செல்லப்பிள்ளை; 
புரியாதோர் பிதற்றிட 
பிடித்திடும் தொல்லை .
உரித்தால் உருவத்தில் 
ஒன்றும் இல்லை ;
சுவைத்தால் சமையலில் 
சொர்க்கத்தின் எல்லை.
காயப் படுத்தினால் 
கண்ணில் நீர்வரவைக்கும். 
பற்றினால் உணவிற்கு, 
ருசிகூட்டும் குணமுண்டு. 
பற்றாது போயின், 
பற்றும் தீயென, 
அரசுக்கு இரணமுண்டு .

ப.சந்திரசேகரன் . 

Wednesday, December 4, 2019

In Search of goodness

Goodness is not a still born child;
Nor is goodness still to be born.
Somewhere goodness exists.
But amidst stealthy smiles and tantalising tears,
Where to find the bubbly or melting minds?
You find the cows in places other than
Cowsheds,though milk is from their udder.
Like milk,goodness never changes
The spot from where it springs like a fountain.
The search for goodness is a lurch 
Wanting to stabilise its moves to meet the goal.
Goodness is a goal as white as milk is,
Unadulterated by profiting pours of water.
Goodness is not a new born child because
It already exists here,as the child's mother 
And the nobly assisting medical hands,
That help the babe bloom from the womb.
Goodness is both born and browsed from sources
That have already laid their sites with proven grace.
It passes through tracks of piracy,by implanting
Perfectly impenetrable privacy protocols.
Goodness can be searched saved,and forwarded.
But the search for goodness needs a password;
And the password might perhaps be 'Conscience'.
Whoever has one,as pure and white as milk,
Can activate their access to the portal of goodness. 
P. Chandrasekaran.