Friday, December 13, 2019

முரண்டுகள் களைவோம்!

எறும்பை தண்டிக்க இ.பி.கோ வோ?
குறும்புக் குழந்தையை கோடரி வீழ்த்தவோ?
இறம்பக் கொத்தித்திடின் இனிமையும் வேகுமே;
முறம்பல கொண்டு முரண்டுகள் களைவோம்!

கறுவுதல் கடைவோர் உறவுகள் உதிர்ப்பர்;
திறந்த மனதிற்கு தெருவெலாம் உறவே!   
பறந்திடும் சிறகுன் பாசமும் பறந்திட,
இறந்திடும் வேளையில்,ஈக்களே உறவாம் .
   
மறந்ததோர் பகைமை,முரண்டுகள் முறித்திட,
சிறந்ததோர் மருந்தென மறதி  நோய்போக்குமே!
கறந்திடும் பாலினில் திரண்டிடும் சுவையென, 
குறைந்திடா குணமது குருத்துடன் தென்னையாம். 

மறம்பினைக் காட்டிட மறப்போர் புரிபவர், 
வெறும்புலம் வென்றிட,முரண்டுகள் பிடிப்பர்; 
அறம்பல பாடியும் அழிவினில் திளைப்போர், 
அறம்புற மாக்குமுன்,முரண்டுகள் களைவோம்! 
ப.சந்திரசேகரன் . 

1 comment:

  1. ".........சிறந்ததோர் மருந்தென மறதி....." நோய்...சபிக்கப் படவேண்டிய ஒன்றல்ல மறதி... இறைவன் அனைவருக்கும் அளித்த வரம் அது. மறதியின் மகத்துவம் இதுதான்

    ReplyDelete