{இனிய புத்தாண்டு 2020}
வரலாற்றி னுள்ளே நதியொன்று ஓடும்
விரைந்திடும் நதிகள் வளைவுகள் தேடும்
அரியதோர் வளைவுகள் ஆற்றல் கூட்டிட,
ஆயிரம் ஆண்டினை,பொற்கால மென்பர்.
பாயிரம் புனைந்திடும் கவிகள் எவரும்,
வாய்மையின் வரிகள் மாற்றுவ தில்லை.
மாய வலையினில் பின்னிடும் அரசியல்
தூய்மைத் தரியினில் தூவிடும் சாயம்.
பொய்யிலா வாழ்வின் பொற்காலக் கனவுகள்,
மெய்யனத் தாயினை தழுவிடும் குழந்தையாய் ,
வையத்துள்,வரலாற்று வேர்கள் ஊன்றிடும்.
இரண்டென ஆயிரம் ஆண்டுகள் கடந்தபின்,
திரண்டுப் பெருக்கயில்,இருபதும் இனிக்கும்.
பரணியில் பேணும் பழமையின் பலமெலாம்,
தரணியின் சரித்திரம் தகர்ப்போர் பலரையும்,
இரணியன் ஈட்டிய தூணுடைத்து வீழ்த்துமாம்!
ப.சந்திரசேகரன் .
வரலாற்றி னுள்ளே நதியொன்று ஓடும்
விரைந்திடும் நதிகள் வளைவுகள் தேடும்
அரியதோர் வளைவுகள் ஆற்றல் கூட்டிட,
ஆயிரம் ஆண்டினை,பொற்கால மென்பர்.
பாயிரம் புனைந்திடும் கவிகள் எவரும்,
வாய்மையின் வரிகள் மாற்றுவ தில்லை.
மாய வலையினில் பின்னிடும் அரசியல்
தூய்மைத் தரியினில் தூவிடும் சாயம்.
பொய்யிலா வாழ்வின் பொற்காலக் கனவுகள்,
மெய்யனத் தாயினை தழுவிடும் குழந்தையாய் ,
வையத்துள்,வரலாற்று வேர்கள் ஊன்றிடும்.
இரண்டென ஆயிரம் ஆண்டுகள் கடந்தபின்,
திரண்டுப் பெருக்கயில்,இருபதும் இனிக்கும்.
பரணியில் பேணும் பழமையின் பலமெலாம்,
தரணியின் சரித்திரம் தகர்ப்போர் பலரையும்,
இரணியன் ஈட்டிய தூணுடைத்து வீழ்த்துமாம்!
ப.சந்திரசேகரன் .
....பொய்யிலா வாழ்வின் பொற்காலக் கனவுகள்,
ReplyDeleteமெய்யனத் தாயினை தழுவிடும் குழந்தையாய் ,..... Diamond Wordings Sr. Pray God to BLESS for EVER Sr....