Thursday, June 27, 2019

காசு

                               
கதவுகள் காணாது,குடியேறும் பிசாசு; 
பதவிகள் பணிக்க,எடைக்காட்டும் தராசு. 
மிதமிஞ்சிக் கிடந்தால் மிட்டா மிராசு;
நிதம்கொள்ளை யடித்தே நிமிர்ந்திடும் சிரசு.
குவித்திடும் கோடிகள் கூப்பிய கரங்களில்;
தவித்திடும் தரித்திரம் நீட்டிய கரங்களில்.
அவித்திடும் நெல்லினில் அகப்படா அரிசிபோல்,
பவித்திரம் காண்பரோ பண்படா பணத்தினில்!
பசுக்களின் மடிதனில் படர்ந்திடும் பாலும்,
அசுத்தமாய்க் கறந்திட  அடர்த்தியைத் துறக்கும்.
இசைபட வாழ்தலும் ஈதலும் மறந்தோர்
பசைபோல் ஒட்டி பணத்துடன் ங்குர். 
விசையினைப் பொறுத்தே காற்றாடி வேகம்;
தசையினைப் பொறுத்தே தடித்தோர் தேகம்.
அசையாச் சொத்தென,அரண்மனைக் கவசமென, 
திசைப்பல கடந்திடும் காசின் கரவொலி,
வசதியைக் கூட்டி உழைப்பினைக் கழித்து,
அசதியைப் பெருக்குமாம் ஆண்டவன் செவிக்கு!
பிசுக்கிய காசெனும் பதுக்கிய பூதம்,
பசியின் கொடுமையைப் பழித்திடும் வேளை, 
கசியுமோ நன்மைகள் கடுகள வேனும்? 
விசித்திரம் போற்றும் விடுகதை வாழ்வில்,
ரசித்திடும் அனைத்திலும்,ராட்சசக் காசே !

ப.சந்திரசேகரன் .   

Monday, June 24, 2019

One Nation,Not One Election

I am naturally one nation 
Strengthened by division. 
My ravishing regional steams 
And neutral national themes,
Hold my dynamic torch,
For a dauntless democratic march.

My children may not live cheek by jowl;  
But they turn the other cheek, 
To cracks and conflicts,for a cocktail.
They speak a galaxy of tongues;
But when the national alarm reaches its peak,
They never speak with their tongue in cheek.

My monsoons may be branded as two;
But my meme tunes have many a hue.
My sons travel with caste slogans, 
On communal wagons,cutting across my soil.
Faith or no faith,all take oath while being sworn in.
Before and after the swearing in,there is a lot of din.

Every time,when rings the eerie election bell, 
A series of gimmicky voices sound pell mell.
How many times will my children shout,
To tweet their 'ideals'straight and stout?
Each election is a fertilizing game,generating
Fresh hopes,failing in the hands of sterile scopes.

Vocal cords camouflage voters' aspirations, 
By grabbing their votes,through cahoots of 
currencies,crackers,and contrived cacophonies,
Or by tickling their pure patriotic nerves, 
Against the hellbent,hostile neighbours.

The aftermath of any election is to reach
Altitudes against slopes,meant for rivals.
I am certainly one nation,against one election.
If national schemes do not match regional dreams,
How right are the one nation one election screams?

P. Chandrasekaran.

Friday, June 21, 2019

அண்ணே !அண்ணே!

ஆத்துக்குள்ளே மீன்பிடிக்க ஆத்தத்தேடி போனேண்ணே! 
ஆத்தாவோட மடியில்கூட அன்புவத்தி போச்சுண்ணே!  
நாத்துநட்டு வச்சாலும் நெல்லுயெங்கே நெலைக்குதுண்ணே! 
பாத்துபாத்து வளத்தாலும் பசங்கபாடு பெரும்பாடுண்ணே ! 
காத்துக்காத்து நிக்கையில காலமெங்கே கனியுதுண்ணே! 
காத்துக்கறுப்பு மனுஷன்கிட்ட அண்டக்கூட கதறுதுண்ணே! 
சாத்திவச்ச கதவுதெறந்து,திருடன்கூட திரியுதுண்ணே! 
மாத்துத்துண்டு மாறிமாறி தோளுமேல திமிறுதுண்ணே! 
வாத்துமடையன் வால்மொளச்சு வானத்துல பறக்குறாண்ணே! 
நீத்துப்போன கனவெல்லாம் நெஞ்சவந்து அடைக்குதுண்ணே! 
தீத்துவைக்கா பிரச்சனைகள் தேள்கொடுக்கா தொரத்துதுண்ணே! 
ஊத்துவத்தி போகையில,ஊரசுத்தி ஓலமுண்ணே !  
ஊத்துக்குளி வெண்ணயின்னா,ஊர்மணக்கும் பேருதாண்ணே! 
தூத்துக்குடி பேரச்சொன்னா துப்பாக்கி ஒலிக்குதுண்ணே!  கூத்துப்பண்ணும்  அரசியல பாத்துபாத்து சலிக்குதுண்ணே! 
மூத்தவங்க பேச்சுகூட மொதவறி போகுதுண்ணே! 
பூத்தமலரு வாடலேன்னா பூத்ததெல்லாம் பொய்யிண்ணே
நூத்துக்கு நூறுயிங்கே,நடப்பதெல்லாம் நெசமில்லேண்ணே
நேத்துப்பாத்த நல்லதெல்லாம் நேத்தோட போச்சுதுண்ணே! 
சேத்துவச்ச பணத்தப்பத்தி  செத்தவங்கிட்ட கேளுண்ணே!
சேத்துக்குள்ள பொரண்டபின்னே சுத்தங்கூட சாபமண்ணே !
வேத்தவுடம்பு வலியெடுக்க,வேதனையே மிஞ்சுதுண்ணே! 
சோத்துக்குள்ளே மறச்சதெல்லாம் பூசணியாய் மாறுதுண்ணே!
போத்துபோல பெருத்தவன,புத்தியறுத்து ஓடுதுண்ணே! 
தோத்துப்போன பின்னாலே தூத்துறதே வழக்கமுண்ணே! 
கோத்தமாலை எல்லாமே  கொரங்குகையில சிக்குதுண்ணே!   
சாத்தானோட சமபந்தி சாப்பிடுவோர் சாட்சியிண்ணே! 
காத்தவன காலால்மிதிச்சு,கடக்குறதே கலியுகம்ணே!  
ப.சந்திரசேகரன் .   

Wednesday, June 19, 2019

Water Water, where are you?

Plough the land as deep as you could,
And keep counting the drops of rain,
Falling on your driest,tilled soil. 
The rain is the worst truant now,than ever.
The clouds are beating against their breast,
Chased by the hooting heat of the sun.
We have saved avarice and envy, 
At the expiry of the elixir of life.
Nothing grows here,excepting hate and enmity.
Nature's wrath is against all our unholy path.
We have to desilt our minds,before
Desilting the ponds and lakes left in the lurch.
Politicians keep shuffling their towel colours
May be,for want of water to wash them'clean'.
Banana leaves and tissue sheets precede food,
Forcing restaurants small,medium and big
To call off hand wash,as a primitive practice.
Rest rooms whining for water,rest as waste.
Gods will take a vacation from being bathed,
To help humans sponge their bodies once a way.
Sponging is of course the sweetest forte for us.
How many sponging episodes we are used to.
From temples to tiny homes all are equal today,
All going the same way,everyday,be they rich or poor.
In nursery tones all cry"water water where are you?"
Pat says water,"find me out,find me out if you are true".
             {Note:-Sponging -accepting money and materials 
                    from others without doing anything in return}
P. Chandrasekaran.

Monday, June 17, 2019

இல்லைக்கு எல்லை இல்லை.

நல்லவர் சொல்லென்றும் நலங்கெட்டுப் போவதில்லை;
அல்லல் மொழிந்துரைக்க,அந்நியமொழி ஏற்பில்லை;
தீயோர் வழித்தடங்கள் தெருமுனைத் தொடுவதில்லை;
பேய்க்கென மரமொன்றும்,பேர்சொல்லி வளர்வதில்லை.

கொல்லன் பட்டறையில் குளிர்காற்றிர்க் கிடமில்லை ;
முல்லைக்கு மமென்றும்,மல்லியால் வருவதில்லை.
பெய்யாத மழைக்கொன்றும்,கார்மேகக் கறையில்லை;
பொய்யான கதைகளுக்கு,புதுப்பதிவுத் தேவையில்லை.

புல்லார்ந்த பூமிகூட பொலிவினை  இழப்பதில்லை ;

நில்லென்றால் நின்றிடின்,அதன்பெயர் நதியில்லை.
சயனமது சூழ்ந்தாலும் சாரதிக்குத் தூக்கமில்லை; 
நயனங்களின் நாட்டியத்தில் நளினம் தோற்தில்லை. 

பொல்லாத பொருள்கூறி,பெருமைகள்  பூப்பதில்லை;
செல்லாத பணத்திற்கும் செல்லும்வழி தடைகளில்லை.
முயலுக்கு வேகத்தடை,முட்டுக்கட்டை ஆவதில்லை; 
வயலுக்கு வரப்பின்மேல் வழக்குக லொன்றுமில்லை. 

வில்லோடு அம்பிணைந்து  எல்லையைக் கடந்தாலும், 
வல்லானின் வீம்பதற்கு,எல்லைக்கல் பொறுப்பில்லை. 
நயங்குன்றி நலிந்தோர்க்கு நான்கெல்லை எட்டாகிடின், 
பயன்படா பாதையிலே,பயணங்கள் பொருத்தமில்லை.
ப.சந்திரசேகரன் .   

Thursday, June 13, 2019

Wheeler Dealers

Wheeler dealers globally position their tracks,
Navigating several cracks,to clinch their deals.
They warily keep watching their weird wheels,
Driving out of kilter,through diplomatic knacks.

They dexterously drive the present to the past,
By digging out dead issues,to burst a fresh blast.
Diversion is an art in the course of deft driving,
To distract the watch dogs to wasteful barking.

Rewriting history is at times a hypnotic exercise,

Sedating the soil with old tricks as a new device.
If silence is the response to disruptive sidetracks,
It speaks of jolting revolts from long drawn stacks.

While dealers in wheels,delight in their daily sale,
Wheeler dealers smartly shuffle their shady deeds.
Wheels have preferences for tractable road speeds;
But wheeler dealers sidetrack lanes,to yarn a tale.
                                 P. Chandrasekaran.
        {Note:-Wheeler dealers are those engaging in 
       political/commercial scheming}




Saturday, June 8, 2019

கணக்கு

விழித்தெழும் பொழுதுகள்,  
வழித்தடக் கனவுகளை 
வேட்டை யாடியதின்
தடயம் தெரிகிறது.

வீட்டையும் வீதியையும் 
கூட்டிப் பெருக்கியதில், 
ஏட்டிக்குப் போட்டியாய் 
கணக்குகள் எகிறுகிறது.

கனமான பொழுதுகளை 
கழித்துப் பார்க்கையில்,
ஆயுட்காலத்தின் அரைப்பகுதி
காணாமல் போகிறது. 

குழித்திட்ட விதைகள் 
புதைத்திட்ட  பிணமாகிட,
கழித்தலோ கூட்டலோ 
காலத்தின் கணக்கு?. 

முழுநிலவு மகிழ்ச்சி 
முகம்மாறித் தேய்ந்திட, 
அழுமிருளாய்ப் பெருகிடும் 
ஆழ்கிணற்றுச் சோகம்.

வரிசையாய்ப் பெருகிடும் 
ஆண்டின் கணக்கினில்,
சிரிப்பின் ஓசையை 
சரித்திடும் ஓலம் .


நெரிசலாய்க் கூடிடும் 
நிகழ்வுகளின் கணக்கில், 
அரியதோர் அடையாளம் 
அட்டையாய் நிற்குமோ?
  
தனக்கென முத்திரை
பதித்திடா வாழ்வில், 
பரிதாபம் கூடுமோ, 
பரவசம் கழியுமோ? 

கோழையின் நெஞ்சினில் 
உழன்றிடும் ஊனத்தின் 
நிழல்யுத்தக் கணக்குகள், 
நிஜமோ பொய்யோ? 

'பதிவு'கள் பெருக்கி 
பாதையை 'வகு'க்கையில், 
நால்வகைக் கணக்கும் 
நாழிகை கணக்கோ? 

போலிக் கணக்குகளே 
புலன்நிறை பாதையினை 
பூதமெனச் சூழ்ந்திடும், 
போதைக் கணக்குகளாம்! 

கூலிக் கணக்கை 
கொடுக்காது பெருக்கிட, 
மூலக் கணக்கு 
மூளையின் பலமாம்! 

மூலையில் ஒருநாள் 
முடங்கிப் படுத்திட, 
மூளையின் கணக்குகள் 
மூடிய கணக்காம்!. 
ப.சந்திரசேகரன் .   

Wednesday, June 5, 2019

Exemptions.


                             l
Every rule might have an exemption;
But every exemption need not bypass a rule.
People are visibly good because,
Their badness is exempted.
Life is obviously full of joy because,
Our eyes have dried up the tears.
The cycle of relationship sustains its speed,
Because it rides over all its ruckus.
Revenge and forgiveness exempt each other.
Friendship exempts all clauses,barring betrayal.
Marriage exempts women from gender mutuality.
Love exempts selective hatred as human foible.
Each exemption is a loophole in human foundation;
Each foundation is laid down with a tacit temptation.

                                  ll 
Religion exempts even deadly sins from punishment, 
Contending the ledger of God through confessions.
When God Himself is exempted from religious fury,
Temples,mosques,churches,synagogues  
And various other places of worship,
Seek exemption from their respective scriptures.
Profit comes with the exemption of loss.
Tax exemptions are a token of concession,
Made available on top of burning taxes.
Even Justice exempts crimes on benefit of doubt.
People exempt political frauds through the ballot.
Trade exempts consumers,from their eligible benefits.
It is all exemptions galore for the sake of convenience
To let each routine exempted,from its ethical lenience.
P. Chandrasekaran

Sunday, June 2, 2019

பெருக்குமோ,இளைக்குமோ?

பணம் பெருத்திட
நாணயம் இளைத்தது; 
சொகுசு பெருத்திட
உழைப்பு இளைத்தது; 
மதம் பெருத்திட
இறைநெறி இளைத்தது; 
சாதீயம் பெருத்திட, 
சமத்துவம் இளைத்தது; 
அதிகாரம் பெருத்திட
அன்பு இளைத்து; 
ஆசைகள் பெருத்திட, 
தேவைகள் இளைத்தது; 
ஆதிக்கம் பெருத்திட
நிர்வாகம் இளைத்தது;
வழக்குகள் பெருத்திட
தீர்ப்புகள் இளைத்தது;
சர்ச்சைகள் பெருத்திட, 
சரித்திரம் இளைத்தது;  
வாகனம் பெருத்திட
சாலைகள் இளைத்தது; 
சுயநலம் பெருத்திட
சேவைகள் இளைத்தது; 
பொருமல் பெருத்திட, 
பொறுமை இளைத்தது;  
இறுக்கம் பெருத்திட, 
இல்லறம் இளைத்தது; 
குற்றம் பெருத்திட, 
குணமெலாம் இளைத்து; 
சுற்றம் பெருத்திட,
சொந்தம் இளைத்து; 
சுதந்திரம் பெருத்திட, 
பொறுப்புகள் இளைத்தது; 
ம் பெருத்திட, 
தருமம் இளைத்தது; 
வன்மம் பெருத்திட, 
வாழ்வே இளைத்தது. 
பெருத்தது இளைத்திடின், 
இளைத்தது பெருக்குமோ? 
ப.சந்திரசேகரன் .