Tuesday, June 20, 2017

Reading in Between.

Can we read one's mind through their pair of eyes?
At times, eyes speak out the mind like melting ice.
But when we read in between the speaking eyes,
It looks as if, they list out the mind's line of lies.
When words fail to forward messages on a tight rope .
By reading in between, we pluck the roots of hope,
To slip faith on a desperate downgrade slope.
From our first fall till the final,horizontal still,
It is the boggling facts of life that fill the bill.
We understand most often to misunderstand,
Framing all human relationships into a fixed brand.
We play our words safe to pick holes in what others say,
By reading in between, closed expressions in an open way.
A straight deal with the eyes and words,ever steals the sway.
                                                P.Chandrasekaran.

Sunday, June 11, 2017

பெண்மையின் புராணப் புதிர்கள்.


            பெண்மையின் புராணப் புதிர்கள்.

 {மன்னனின் மனைவி ஆனால் அவனின் இதயத்து ராணியன்று}.

     தசரதனும் பாண்டுவும் கண்ணனும் அவரவர்களின் விருப்பங்க ளில் வெளிப்படையாகவே இருந்தனர்.புராணங்களிலும் இதிகா சங்களிலும் பொதுவாக மன்னர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியைக் கொண்டிருந்தனர்.அரசியல் லாபத்திற்காக அல்லது செல்வத்திற்காக ஒரு மனையாளும் இதயத்துக்கு இனியவளாக ஒருத்தியும், இவர்களில் பலருக்கு உண்டு. சுருக்க மாகச் சொல்லப்போனால் மன்னர்கள் இதயத்தால், மனதால், உடலால், பிளவுபட்டிருந்தனர்
    கோசலையின் வேதனை இராமனின் வனவாசச் சோதனை களுக்காக மட்டுமல்லாது அவளைப் பற்றியும் இருந்தது. நாடாளப்போகும் ஒரு மன்னனின் தாயெனும்  பெருமிதத்துடன், கணவன் தசரதனின் அன்பிற்காகக் காத்திருந்தாள் கோசலை. ஆனால் இராமன் வனவாசம் செல்ல, அவளின் அந்த பெருமிதமும் பாழாய்ப்போனது.கைகேயியின் கொடூரக் காதலுக்கு இரையான சோகம், முடிவில் தசரதனை  கோசாலைபால் ஈர்த்தது. ஆனால் கோசலை தனது பெண்மையின் வெற்றியைக் கொண்டாடும் முன்பே, அவள் கரங்களில் மாண்டான் தசரதன்.
    சுயம்வரத்தில் குந்திதேவி தேர்ந்தெடுத்த பாண்டுவோ,தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த பின்னர் மாதுரியை மணக்கிறான். மாதுரியோ கால்நடைகளை பராமரிக்கும் யாதவ குலத்தைச் சேர்ந்த குந்திதேவியை ஏளனமாகப் பார்க்கிறாள். குந்திக்கோ, தனது சக்களத்தியின் அலட்சியத்தை சகித்துக்கொள்ளவேண்டிய நிர்பந்தம்.சபிக்கப்பட்ட பாண்டு, இறைவன் ஆசிபெற்ற குந்தி தேவியை இறையருளுடன் இணைந்து,ஆண்மக்கள் பெற்றெடுத்து தாய்மையை கௌரவிக்கச் செய்கிறான்.ஆனால் பள்ளியறைக்கு மாதுரியே எப்போதும் பாண்டுவின் தேர்வு. பால்வினைப் பயனாக பாண்டு மாண்டுப்போக நேரிட, உடன்கட்டை  உரிமை கொண்டாடுகிறாள் மாதுரி. ஆண்மக்கள் ஐவருடன் அலை க்கழிக்கப்பட்ட குந்திதேவி, அரசியாக வாழ்ந்திருக்கவேண்டிய மன்னர் மாளிகையில், அதிகாரத்தின் அள்ளக்கையாக வாழவேண்டிய அவலம் ஏற்படுகிறது.
    மாறுபட்ட விசுவாசப்  பரிமாற்றத்தின் விளைவாக கண்ணனை மணக்கும் சத்யபாமா, செல்வச்  செழிப்புடன் சயமந்தக ஆபரணம் உட்பட அனைத்தும் பெற்றிருந்தாலும், சிசுபாலனின் கோரப்பிடியிலிருந்து ருக்மணியைக் கடத்திச் செல்கிறான் கண்ணன். ஒருமுறை நாரதரின் போதனையால் உந்தப்பட்டு கோசலை ஏலத்தில் கண்ணனை எடைக்கு எடை தங்கமும் விலைமதிப்பற்ற ஆபரணங்களும் கொடுத்து தன்வயப்படுத்த முயல, அத்தனை செல்வத்தையும் தாண்டி கண்ணன் கனக்கி றான். ஆனால் பின்னர் ருக்மணியோ, ஒரே ஒரு துளசியை தராசின் ஆபரணப் பகுதியின்மேல் வைக்க, தராசு சமமாகி, செல்வத்தைக் கடந்து, கண்ணன் அன்பால் வெல்லப் படுகிறான்.
                       சொர்க்க மரம்:-
   பாரிஜாத மரச் சம்பவமும் படிப்பினை ஊட்டுவதாகும். கதை யின் ஒரு விளக்கத்தின்படி கண்ணன் பாரிஜாதச் செடியை நட்டு அதன் மலர்கள் அனைத்தும் ருக்மணியின் தோட்டத்தில் விழச் செய்ததாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும், கதையின் இன்னொரு விளக்கமோ, சொர்க்கமலர் சத்யபாமாவுக்குச் சொந்தமானது என்றும், ஆனால் மலர்கள் கண்ணன் ருக்மணி யோடு இருக்கும் வேளையில் மட்டுமே மலரும் என்றும்,கூறுகிறது. மலர்களுக்குச் சொந்தம் கொண்டாடும் சத்யபாமாவின் நினைவலைகளில், அவள் கணவன் வேறொரு பெண்ணோடு பிணைந்திருக் கிறான் எனும் ஆதங்கம் அகலாதிருக்கும்.
    தசரதனும் பாண்டுவும் கண்ணனும், தாங்கள் வேலிதாண்டிய வெள்ளாடுகளாகவும், மற்றொரு பெண்ணை தங்கள் மனைவி மார்களுக்கு எப்போதும் நினைவுறுத்தும் காரணிகளாகவும் இருக்கிறோம் எனும் உண்மை நிலையினை, ஒருபோதும் கண்டுகொள்ளாதவர்களாகவே இருந்தனர். புறக்கணிக்கப்பட்ட இவர்களின் மனைவிமார்கள் மீது நாம் பரிவுகாட்டும் அதே நேரத்தில், தாங்கள் நேசிக்கும் மற்றொரு பெண்ணையும், வஞ்சிக்கும் ஆடவர்களாகவே இவர்கள் இருந்தனர் என்பதை, நாம் மறுப்பதிற்கில்லை.
     Modest translation of "Feminine Mythique"{King's Wife but not the Queen of his heart} Published in the Friday Review Supplement 9th June, 2017, by Arshiya Sattar}
                                                                                   P.Chandrasekaran.

Friday, June 2, 2017

முத்தமிழும் மணக்கும் நாள். ஜூன் மூன்று




திருக்குவளை தரிசித்து திருக்குறளை தெளிவித்து,
வரைக்குள்ளே  வரிகளும் வார்த்தைகளும் உள்ளடக்கி , 
உரியதோர் மொழியாற்றல், உணர்வோடு வகுத்தவனே! 
பருக்கையே பதமென்பர், பெரும்பானைச்  சோற்றுக்கு;
இருக்கையில் நீ அமர்ந்து பேசத் தொடங்கிவிட்டால்,
ஒரு போகம் பலவாகி ஊருக்கே விருந்தாகும்.

ஒருதிசையில் என்றென்றும் உதித்திடும் சூரியனை,
கருமேகம் வளைத்தாலும் கதிர்வீச்சில் கலைவதுபோல்,
உருமாறி பலருன்னை பழிபோட்டு பேசிடினும்,
இருமடங்காய் உன்படைப்பு, உன்புகழை நீடுயர்த்தும்.

அருந்தவமாய் தமிழுக்கு நீசெய்த தொண்டனைத்தும்,
புரிந்தவர்க்கே புலப்படுமாம், பதிப்புரிமைப் பலனாக ;
சரிந்துவரும் செந்தமிழைச் சீர்படுத்தும் சிந்தனையை,
விரைந்திங்கே விதைத்திடுவோம்,நீபிறந்த நாள்பரிசாய்!
                                                                                       ப.சந்திரசேகரன்.