Thursday, October 20, 2016

சொல் தோழா!

சொல்  தோழா!
வேற்று மனுஷாள் என்பவர் யார்?
வேறு கிரகங்களை சேர்ந்தவரோ?
நம்மோடு வாழ்ந்து நம்மில்  வேறுபட்டவரோ?
வேறு மதமோ இனமோ, அன்றின்
மாற்று மொழிபேசும் உரையாட இயலாதோரோ?
பழகாதவரோ பழகியும் நம்மைப் புரியாதவரோ?
பேரிடர் வருகையில் பரந்த மனதோடு
ஊருக்குத் துணையென உறுதியாய் நின்று,
தேரெனத் தோள்கொடுப்போர் அனைவரும்,
இந்த வேற்று மனுஷாள் தானே!
நட்பு  வட்டம் நலம் நாடிச் சூழ்ந்தாலும்,
மீட்புப் பணியில் மனபலம் சேர்த்திடும்
சமூகச் சொந்தம், வேற்று மனுஷாளோ?
சொல் தோழா!.  
                                        ப.சந்திரசேகரன் 

Sunday, October 16, 2016

மாயா!

மாயா!
மதியும் மமதையும் மனமென்றுச் சொல்லி
நதியின் எழுச்சியுடன் நரன்வலம் முடிப்போம் ;  
இதயம் துடித்தலே இதிகாசமென் றுரைத்து  
சிதறியச் சுவாசத்தில்  சிதையாய் கிடப்போம் ;.    
சதையும் எலும்பும் உதவா நிலையில்,
விதியைப் புறங்கூறி விடை பெறுகையில்,
புதையவோ  மண்ணில் விதையெனப் பதிந்து?
கதியற்று எரியவோ  கடைசிக் கனலாய்?.
எதுபொய் எதுமெய் என்றறியா வாழ்வில்,
பொதுவெனப் போற்றுதல் மாயையின் மாட்சியே.
                                                               ப. சந்திரசேகரன் .             

Wednesday, October 12, 2016

Transcending Transitions..



Transcending Transitions.
--------------------------------------------
Joy is like the chewing gum
That takes its inevitable exit,
When the chewing aches the jaws;
Pain is at times, the prick of a pin.
Doubling up often,as the hit of a hammer.
When hopes rise moderately,
They are like the parapet walls, 
Bigger ones grow like huge,gated walls,
To be razed down by seismic despair. 
Love passes through the mind like breeze,
Only to create successive blows of storms.
Friendship is both the credit and debit sides,
Of the same swiping card.
Parents who are strong pillars,
Transform into stumbling blocks.
Children bound as pillows and blankets,
Become hardened pieces of stones,
By their own battering process of growing up.
Siblings fight and fondle or fondle and fight,
Striking a balance between scenes and their sequence.
Even spouses caress each other to create tunes of love,
To let musical notes glide, from symphony to cacophony.
The statues at the shrines are seen as Gods,
Or as shining carved and painted images;
The halo of gods turns as a hollow myth,
Matching the mood of prayer and its base.
Transitions like agile and aerobic acrobats, 
Transcend the rough terrains of permanence.
                                                  P.Chandrasekaran.


Sunday, October 2, 2016

சொல் தோழா!

சொல் தோழா!
மரணம் மகத்தானது .அழகானதும் கூட .
அதனால் தான் 'இயற்கை எய்தினார்'
'காலமானார்' என்று அழகாகச் சொல்லுவோம் .
மரணப்புன்னகையும் மரணத்திற்கு மரியாதை சேர்க்கும் .
சிவலோகப் பதவி அடைந்ததால் அல்ல அப்புன்னகை .
அவதூறும் அநியாயமும் அடர்ந்த மண்ணைவிட்டு
அகன்றதன், அகம்நிறை அற்புதமே அப்புன்னகை .
ஆனால் இன்று மரணத்திற்கே மரியாதை இல்லை.
'இருக்கும் இடத்தில் இருந்தால் எல்லாம் சவுக்கியமே'
என்னும் கவிதை வாக்குகள் பொய்யாகி
எங்கிருந்தாலும், சிவனே என்றிருந்தாலும்,
அங்குமிங்கும் தேடிவந்து கருணையின்றி கருவறுக்கும்
அன்பாலும் பகையாலும் அதிரடியாய் விபத்தாலும்,
ஒன்றாகிப் பலவாகும் ஓலத்தின் எதிரொலியை,
மனம்குன்றி  மரணமென்றால், மகத்தானதோ மரணம் ?
சொல் தோழா !.
                                              ப.சந்திரசேகரன் .