Monday, February 26, 2018

இல்லாததும் இல்லை.





கல்லிலே கலைவண்ணம் கண்டதொரு காலம்;
கொல்லாமல் கொன்றிடும் கூட்டாளிக் கோலம்.
வெல்லமாய் இனித்ததிங்கே வேம்பாகிப் போக,
இல்லாதது இருந்திடுமோ,இலையுதிரும் நேரம்?

வெல்லாமல்  வென்றது,வெறுங்காட்சி யாக,
தில்லுமுல்லுத் திருவிழா திகைப்பூட்டக் காணீர்!
நெல்லுக்குள் அரிசியென்று நாம்அள்ளி எடுக்க, 
மெல்லக்கூடா உமியாகி நம்பசியை நகைக்கும்.

சொல்லும் செயலும், சூதினைப் பிரசவிக்க,
சில்லரை பெரும்பணமாய்,சீக்கிரத்தில் குவியும்; 
எல்லாமே பொய்யாகி, ஏய்த்திடுந் தருணம், 
கல்லில் கலையுமொரு,கண்கட்டி வித்தையே.

மல்லாந்து படுத்து வானத்தை பார்க்கையில்,
கல்லாக நாம்நினைத்த கடவுளங்கே தெரியும்;
பொல்லாப்பு மறந்து கல்லினைக் கண்டால்,
இல்லை என்பதெல்லாம்,இல்லாமல் போகும்?.
                                                           ப.சந்திரசேகரன் .  

Friday, February 23, 2018

The New columns.






Learn!
Learn to help others learn.
Before you make them earn.

Know!
Know that the mind needs the stuff,
To refine the lanes,raw and rough.

Hear!
Hear more the bells, that ring to start,
Than those that keep tolling,to depart.

Listen!
Listen to sense, rather than sounds,
To see that your listening re-sounds.

Speak!
Speak not to unload, but to be understood;
Make meaning explode,as loud as it could.

Read!
Read to spread as the vast,starry sky;
Not to shrink low and stagnantly lie.

Write!
Write firmly to augment others'vision,
But not feebly so as to mar the mission.

Education shall pointedly build new columns,
To rise and expand at the great global forums.
                                                              P.Chandrasekaran.

Wednesday, February 21, 2018

வாடா மலர்கள் .













நிறம்பல காண்பதே ஞாலக் கணக்காம்.
பரம்பரை வீரம் பரவிய மண்ணில்,
சிலம்பது சிதறி, சீற்றம் வெகுண்டு,
கரும்புள்ளி தன்னை,கரைத்தது தீயில்.

எறும்புக்கு எதற்கு எண்ணைக் குளியல்?
வரும்புயல் அறியுமோ காகித மலர்கள் ?
என்பது போன்ற, ஏளனக் கணைகள்,
அரும்பிடும் மலரினை அடர்வது மரபே.

துரும்பெனும் காகிதம் தோரண மாகி,
பெரும்பலத் தோடு  வானிலும் பறக்கும்;
விரும்பி மணமது பரப்பிடும் மலரும்,
திரும்பிப் பார்க்கையில் வாட்டம் காணும்.

திறம்பட ஊன்றி, தெருவிளக் காகிடின்,
வெதும்பிடும் மக்களின் இருளது மாயும்;
கரும்பின் இனிப்பாய் கலந்து தோன்றலே,
வரம்புக்குள் வாழும் வாடா மலர்களாம்!
                                                    ப.சந்திரசேகரன் .  

Tuesday, February 20, 2018

பேச்சு பேச்சாருக்கனும்!

ஓரமாப் போனாலும்,
நேரமும் நேராயிருக்கனும்;
நரி கூட போயிகிட்டு,
நம்பிக்க பல்ப எரியவுட்டு,
நம்பிக்க பியூசானா,
ஓம்பொழப்பு நாரிப்பூடும்.
சபலபுத்தி பயலுவல,
சட்டப்படி சுட்டுபுட்டு, 
சட்டுன்னு சங்கூதனும். 
அதிகாரத்துல குந்தாம,
அங்கபிரதட்சணம் பண்ணினீன்னா
ஆட்டமெல்லாம் அடங்கிபூடும்.
அந்த வங்கி இந்த வங்கி
அம்புட்டும் உள்ளபூந்து,
ஆளுக்கொரு பக்கமா
ஆட்டைய போடுறப்போ,
ஆந்த கண்ணா இருந்தாத்தான்,
ஆட்சிக்கு காலிருக்கும். 
ஒலகஞ் சுத்தி பாத்தாலும்,
ஒம்பார்வை என்னைக்கும்,
வூட்டாண்ட இருக்கனும்.
மூச்சு நின்னுபோறவ,
ஏச்சுப்பேச்சு கேட்டாலும்,
பேச்சு பேச்சாருந்தா,
என்னைக்கும் ஓம்பேச்சு,
ஊரச்சுத்தி நெதம் கேக்கும். 
                       ப.சந்திரசேகரன் .  

The Dawning Design





When the night breaks into a dawn
I wake up with a wry wriggling yawn.
Like the internet's lethargy for speed,
The snail of my mind,shudders to lead.

Fresh morning is a fiction for the fussy,
Who make their day and night messy.
Even sleeping pills are estranged wives
For those, who refuse to live their lives.

Greet the dawn as if it is a new born kid;
Wake up to rule the day as you never did.
Each night is nothing but the diurnal rear,
As each day dawns to make the night dear.

Ageing is a compendium of days and nights,
Adapt the nights for awesome dawning sights.
                                         P.Chandrasekaran.



Saturday, February 17, 2018

கைகள்





இளமையாய் இருக்'கை'யில்,
காதலை நினைக்'கை'யில்,
இறக்'கை' கட்டி பறக்'கை'யில்,
இனியவளின் 'கை' பிடித்து 
இல்லறத்தில் இணை'கை'யில் 
நம்பிக்'கை' ஊற்றாகி,
நன்மக்கள் பிறக்'கை'யில்,
மனம் உவ'கை' அடைந்திட,
பிள்ளைகள் படிக்'கை'யில், 
பட்டமென உயர்'கை'யில்,
செல்வாக்'கை' உயர்த்திடும் 
பெருமையில் திளைக்'கை'யில்,
நன்றியுடன் 'கை'கூப்பி
இறைவனைத் தொழு'கை'யில்
இலக்'கை'முடித்து,
காலனின் கணக் 'கை' 
படுக்'கை'யில் கடத்தாது , 
வாயிலைக் கடக்'கை'யில்
மனைவி மனம் வலிக்'கை'யில்,
மக்கள்  னம் தவிக்'கை'யில்,
நண்பர் மனம் கனக்'கை'யில்,
ஊர் சுற்றி  அழு'கை'யில்
மயானத்தை அடை'கை'யில்
வாங்கி வந்த வரமெல்லாம்
வசந்தமாய் நிறை'கை'யில்,
மண்ணாய் சாம்பலாய்
பூதவுடல் முடி'கை'யில்,
நிற்கை'யில்   நடக்'கை'யில்,
நிலம்சார்ந்து கிடக் 'கை'யில்  .
இறுதியில் இவ்வுடலை
பல'கை'கள் சுமக்'கை'யில்,
உல'கை'யே உருவாக்கும் கைகளே,
ஊன்றுகோல் ஆகிடும் கைகளாம் !
                                ப.சந்திரசேகரன் .  





Friday, February 16, 2018

Freedom Fouls





Freedom is the facsimile of indiscipline.
It festers peace with the burden of revolt,
Like the fuming fissures of fistula formation.
Nonsense is the foster child of freedom,
Freezing logic with fomenting libel,
To clinch issues with cries and clouts.
Licentious louts, laminate their crime profiles,
Frivolously freeloading themselves anywhere.
Free poachers mar freedom fighters' goals,
Usurping others' rights as theirs;
Macho pride molests gender freedom,
With its  surging shoves,going Scot free.
Children's chartered theories of freedom
Spell their grim genetic inheritance flaws.
Academic freedom has an apathy for knowledge,
Afflicting alike,the Faculty and its wards.
Even the voice of justice is gagged gorgeously,
By the exploiting free hands of power centres.
Freedom becomes an administered poison,
Stealing and seeping into systems infinite, 
Like secret funds bloating the chests of 
Free markets and liberal money diggers.
From fetters did freedom spread its wobbling wings
Only to spread them too far,touting its thorny stings. 
                                                  P.Chandrasekaran.

Wednesday, February 14, 2018

காதலர் தினம்




{இனிய காதலர் தின வாழ்த்துக்கள்}

பல்லுக்கு வெண்மை மீது காதல்;
சொல்லுக்கு நேர்மை மீது காதல்.
வில்லுக்கு பார்த்தன் மீது காதல்;
வீணைக்கு வாணி மீது காதல்.
புல்லுக்கு பனித்துளிமேல் காதல்;
பூமிக்கு பசுமைமேல் காதல் .
அல்லிக்கு நிலவுமேல் காதல்;
ஆமைக்கு பொறுமைமேல் காதல்.
கல்லுக்கு சிற்பிமேல் காதல்;
கால்களுக்கு காத்திருப்பே காதல்.
மெல்லிய தோர் உணர்வுகளால்,
முல்லைபோல், மல்லிபோல்,
மல்லுக்கட்டி மணம்பரப்பும்,
சொல்லாத காதலுக்கோ,
மவுனத்தின் மேல் காதல்.
நில்லாமல் சுற்றும் நிலமகள்,
கதிரவனை அன்றாடம் காதலிக்க,
நல்லதோர் காதலை,
நாமும்தினம் சுவாசிப்போம்! 
                                     ப.சந்திரசேகரன் .  

Tuesday, February 13, 2018

சிவனின் ராத்திரி.




{புனித சிவன்ராத்திரி வாழ்த்துக்கள்}

அன்பொரு தவமெனில் அன்பது சிவமே
தென்படும் ஒளியே தேடியநல்  வரமாம்;
முன்பொரு பிறவியின் மூல தனமாய்,
பின்பலம் தருவது அன்பெனும் தூணே!
இன்புறும் நினைவுகள் எல்லாம் அன்பே!
ஒன்பது ரசனையும் ஒருவழிக் கூறுதல்,
'அன்பைப் பற்றிடின் அனைத்தும் சிவமே'.
தன்பிறை யோடு அரவமும் சூடிய,
தனிப்பெரும் சிவனை இரவெலாம் தொழுதிட ,
முனைப்புடன் விடிவது முழுவதும் அன்பே! 
                                                 ப.சந்திரசேகரன் .  

Sunday, February 11, 2018

Love Liberally {In honor of upcoming Valentine's day}

                          I

Occasionally, 
We begin to love people,
Whom we would not have loved,
Had we been incapable of giving love.
Nobody is unloved here,
Though there are many unlovable,
For reasons,rising from within us.
Love does not ask for Aadhaar details.
Nor does love set an enrollment course.
Triggering moments turn on the switch,
For the lights of love to break the gloom.
The eligibility for love is ever an enigma.
As love surpasses stories of social stigma.
Minds meet in places where people meet
With complying perceptions turning upbeat. 

                          II

Usually,
We pick up by a flash of our instinct,
Persons to form part of our itinerary. 
While turning the pages of the Love Book,
We pass and brood over the pages turned,
Grooming the mood for the pages ahead.
Something happens at our mind's inner lobby,
With rhythms of intimacy,rocking the heart.
Love is either a hefty happening of a day,
Or an era of events,effacing time zones.
Liberal lovers, explore eternal love stations,
Journeying through transcending highways,
Harboring the hiatus free halo of love's rays.
Where more good is given,love stamps its logo.
Where more love is received,love says'No'to woe.
                                                                  P.Chandrasekaran.

Friday, February 9, 2018

வலி




பிரசவமாய்ப் பெண்மையின் வலிமையை உணர்த்தும்;
உழைப்பென, சுமந்திடும் தோள்களை உயர்த்தும்.
பசியாகி ஏழ்மையின் கொடுமையை உரைக்கும்.
பகைமையாய் பலரது வக்கிரம் விளக்கும்.
நோயென நூறுவகை பிரிவுகள் பற்றும்.
பிள்ளைப் பேறின் பெருமைகள் தொலைந்திட,
தொல்லையாய்த் தினமும் நிம்மதி திண்ணும்.
வாய்வலிக்கச் சிரித்தால் நோய்போகு மென்றாலும்,
வாய்மூடி விறகாய் விடைபெறும் வேளையில்,
காயங்கள் பெரிதாகி மனம்கத்து வலிக்கும்.
உலக்கையாய் உறவுகள் மனதை உரலாக்க,
பிறக்கையில் அழுவது பின்னர்வரும் வலிக்கோ?
வலியெனும் புள்ளிகளின் கோலமே வாழ்வெனில் 
வலியிலா மரணமேனும் வழியனுப்ப வந்திடுமோ? 
                                                                   ப.சந்திரசேகரன் .  

Wednesday, February 7, 2018

Body Repairs

What do we wear,
To cause life's wear and tear?
We do not wear any of the hidden organs.
It is they who wear the skin and muscles.
Is the body a mount, from where blood springs?
Until the body transforms into a log of wood,
The flowing blood never gets dried up or frozen,
But gets road blockers against its flow.
The cardio specialists remove the barricades
And reset the heart in motion.
There are strokes causing collateral damage.
The cerebral specialists arrest the celebration of palsy.
The orthopedists rename knees as tyres
And turn auto mechanics, to replace the tyres,
With fresh choreography for the joints of the new knee.
Oncologists anchor our hopes against cancerous erosion.
Ophthalmologists augment the fading vision of life.
Orthodontists bring order to our teeth bound smiles
Peeping into dental roots for a painless pace.
Pulmonary experts promote breathe easy projects,
For our jittery lungs holding the breath. 
Kidneys worse than Knees, struggle to revive their role
At the mercy of the Nephrologist's surgical knife.
It is the Liver that stands the litmus test against liquor
And the onslaught of several solids and liquids.
The repair of the body at various medical workshops
Ridicules at regular intervals, man's pride of permanence. 
                                                            P.Chandrasekaran.

Thursday, February 1, 2018

மாயா !






பாதியில் நிற்பது ஆதியின் குழப்பமெனின்
பாதையைக் குறைகூறல் பாசாங்குக் கதையே!
மீதியைக் காண்பதே  மீள்வதன் படிவமாம்;
மோதலின் முடிவுகள் முடிவிலா மாயையே !
மதில்மேல் பூனைக்கு மதிலென்ன தடையோ?
விதியைத் தூற்றிட வெற்றிடம் நிரம்புமோ?

நாரதர் இன்றியே நாளுக்கோர் கலகமிங்கே; 
ஊருக்கே உலையாக உருமாறும் கலவரங்கள்.
நேர்வழிப் பாதையை நடுவினில்  அடைத்திட,
சேரும் பாதைகளில்  சந்தைபோல் நெரிசல்ள்.
பரமபதப் பாதையிலே படிப்படியாச் செல்வதோ ?
பரிவாரம் படைகொண்டு போராடித் தோற்பதோ? 
விரிந்ததோர் நெடுஞ்சாலை வழிமுட்டி நின்றி
சரியான சந்துகளும் சக்கரத்தின் வியூகமே . 

எதுக்கெது சரியென்னும் புதுப்புது குழப்பத்தால், 
பதைத்திடும் மனம்கூட பயணத்தின் தடையே ;
நதியின் பாதைக்கு நாளுமதன் வேகமெனின், 
பதித்திடும் பாதத்தின்,வழித்தோழன் வித்தகமே.  
பூதமெனும் போலிகளால் பெருமூச்சு வாங்காது, 
பாதையின் தடையகற்றும் பாசுரம், மனபலமே. 
                                                                    ப.சந்திரசேகரன் .