Wednesday, February 14, 2018

காதலர் தினம்




{இனிய காதலர் தின வாழ்த்துக்கள்}

பல்லுக்கு வெண்மை மீது காதல்;
சொல்லுக்கு நேர்மை மீது காதல்.
வில்லுக்கு பார்த்தன் மீது காதல்;
வீணைக்கு வாணி மீது காதல்.
புல்லுக்கு பனித்துளிமேல் காதல்;
பூமிக்கு பசுமைமேல் காதல் .
அல்லிக்கு நிலவுமேல் காதல்;
ஆமைக்கு பொறுமைமேல் காதல்.
கல்லுக்கு சிற்பிமேல் காதல்;
கால்களுக்கு காத்திருப்பே காதல்.
மெல்லிய தோர் உணர்வுகளால்,
முல்லைபோல், மல்லிபோல்,
மல்லுக்கட்டி மணம்பரப்பும்,
சொல்லாத காதலுக்கோ,
மவுனத்தின் மேல் காதல்.
நில்லாமல் சுற்றும் நிலமகள்,
கதிரவனை அன்றாடம் காதலிக்க,
நல்லதோர் காதலை,
நாமும்தினம் சுவாசிப்போம்! 
                                     ப.சந்திரசேகரன் .  

1 comment: