பிரசவமாய்ப் பெண்மையின் வலிமையை உணர்த்தும்;
உழைப்பென, சுமந்திடும் தோள்களை உயர்த்தும்.
பசியாகி ஏழ்மையின் கொடுமையை உரைக்கும்.
பகைமையாய் பலரது வக்கிரம் விளக்கும்.
நோயென நூறுவகை பிரிவுகள் பற்றும்.
பிள்ளைப் பேறின் பெருமைகள் தொலைந்திட,
தொல்லையாய்த் தினமும் நிம்மதி திண்ணும்.
வாய்வலிக்கச் சிரித்தால் நோய்போகு மென்றாலும்,
வாய்மூடி விறகாய் விடைபெறும் வேளையில்,
காயங்கள் பெரிதாகி மனம்கனத்து வலிக்கும்.
உலக்கையாய் உறவுகள் மனதை உரலாக்க,
பிறக்கையில் அழுவது பின்னர்வரும் வலிக்கோ?
வலியெனும் புள்ளிகளின் கோலமே வாழ்வெனில்
வலியிலா மரணமேனும் வழியனுப்ப வந்திடுமோ?
ப.சந்திரசேகரன் .
Excellent description of pangs of pain.
ReplyDeleteThank you for your response Raj
ReplyDelete