இளமையாய் இருக்'கை'யில்,
காதலை நினைக்'கை'யில்,
இறக்'கை' கட்டி பறக்'கை'யில்,
இனியவளின் 'கை' பிடித்து
இல்லறத்தில் இணை'கை'யில்
நம்பிக்'கை' ஊற்றாகி,
நன்மக்கள் பிறக்'கை'யில்,
மனம் உவ'கை' அடைந்திட,
பிள்ளைகள் படிக்'கை'யில்,
பட்டமென உயர்'கை'யில்,
செல்வாக்'கை' உயர்த்திடும் ,
பெருமையில் திளைக்'கை'யில்,
நன்றியுடன் 'கை'கூப்பி
இறைவனைத் தொழு'கை'யில்
இலக்'கை'முடித்து,
காலனின் கணக் 'கை'
படுக்'கை'யில் கடத்தாது ,
வாயிலைக் கடக்'கை'யில்
மனைவி மனம் வலிக்'கை'யில்,
மக்கள் மனம் தவிக்'கை'யில்,
நண்பர் மனம் கனக்'கை'யில்,
ஊர் சுற்றி அழு'கை'யில்
மயானத்தை அடை'கை'யில்
வாங்கி வந்த வரமெல்லாம்
வசந்தமாய் நிறை'கை'யில்,
மண்ணாய் சாம்பலாய்
பூதவுடல் முடி'கை'யில்,
நிற்கை'யில் நடக்'கை'யில்,
நிலம்சார்ந்து கிடக் 'கை'யில் .
இறுதியில் இவ்வுடலை
பல'கை'கள் சுமக்'கை'யில்,
உல'கை'யே உருவாக்கும் கைகளே,
ஊன்றுகோல் ஆகிடும் கைகளாம் !
ப.சந்திரசேகரன் .
Konnute po.
ReplyDeleteHa! ha! I like this one word comment
ReplyDeleteI am sorry 2 words comment
ReplyDeleteAdmired your "Kai Pakkuvam" Sir.
ReplyDeleteI like your punning upon the word 'Kai'
ReplyDeletePoet in you is mersal
ReplyDeleteNaan Thamizhodu Mersalaayitten Jana.
ReplyDelete