Tuesday, February 13, 2018

சிவனின் ராத்திரி.




{புனித சிவன்ராத்திரி வாழ்த்துக்கள்}

அன்பொரு தவமெனில் அன்பது சிவமே
தென்படும் ஒளியே தேடியநல்  வரமாம்;
முன்பொரு பிறவியின் மூல தனமாய்,
பின்பலம் தருவது அன்பெனும் தூணே!
இன்புறும் நினைவுகள் எல்லாம் அன்பே!
ஒன்பது ரசனையும் ஒருவழிக் கூறுதல்,
'அன்பைப் பற்றிடின் அனைத்தும் சிவமே'.
தன்பிறை யோடு அரவமும் சூடிய,
தனிப்பெரும் சிவனை இரவெலாம் தொழுதிட ,
முனைப்புடன் விடிவது முழுவதும் அன்பே! 
                                                 ப.சந்திரசேகரன் .  

2 comments: