Tuesday, February 20, 2018

பேச்சு பேச்சாருக்கனும்!

ஓரமாப் போனாலும்,
நேரமும் நேராயிருக்கனும்;
நரி கூட போயிகிட்டு,
நம்பிக்க பல்ப எரியவுட்டு,
நம்பிக்க பியூசானா,
ஓம்பொழப்பு நாரிப்பூடும்.
சபலபுத்தி பயலுவல,
சட்டப்படி சுட்டுபுட்டு, 
சட்டுன்னு சங்கூதனும். 
அதிகாரத்துல குந்தாம,
அங்கபிரதட்சணம் பண்ணினீன்னா
ஆட்டமெல்லாம் அடங்கிபூடும்.
அந்த வங்கி இந்த வங்கி
அம்புட்டும் உள்ளபூந்து,
ஆளுக்கொரு பக்கமா
ஆட்டைய போடுறப்போ,
ஆந்த கண்ணா இருந்தாத்தான்,
ஆட்சிக்கு காலிருக்கும். 
ஒலகஞ் சுத்தி பாத்தாலும்,
ஒம்பார்வை என்னைக்கும்,
வூட்டாண்ட இருக்கனும்.
மூச்சு நின்னுபோறவ,
ஏச்சுப்பேச்சு கேட்டாலும்,
பேச்சு பேச்சாருந்தா,
என்னைக்கும் ஓம்பேச்சு,
ஊரச்சுத்தி நெதம் கேக்கும். 
                       ப.சந்திரசேகரன் .  

No comments:

Post a Comment