இனிய சித்திரைத்திருநாள் மற்றும்
==================================
தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.
=================================
தேரிழுக்கக் கூடிடும் தெருவினர் எல்லாம்,
ஊருடன் ஒழுகுதல்,உயர்வுள்ளல் என்பர்.
யாருக்கும் யாரும் தாழ்ந்தவர் இல்லை;
மார்தட்டிக் கூறலே மானத்தின் எல்லை.
போர்தனை மூட்டிடும் போக்கிரி பலரும்,
சூரராய் முழங்கி சோர்ந்திடும் வேளையில்,
கோரமாய்த் தாக்கிய கொடுங் கணைகளால்
பேரறியா மக்கள் புதைந்தனர் மண்ணில்,
பாரினில் நல்லோர் பதைபதைத் திருக்க!
ஓரிரு நாடுகள் உலகையே உலுக்குதல்,
காரிருள் தன்னில் கடத்திடும் அமைதியை!.
பூரிக்கும் வெளிச்சம் பளிச்சென
படர்ந்திட,
வேர்களாய் மண்ணில்,வேள்விகள் ஊன்று!
தேர்கள் இழுக்கையில்,தேறிடும் திருவொளி.
ப.சந்திரசேகரன்.