பாதியில் நிற்பது ஆதியின் குழப்பமெனின்
பாதையைக் குறைகூறல் பாசாங்குக் கதையே!
மீதியைக் காண்பதே மீள்வதன் படிவமாம்;
மோதலின் முடிவுகள் முடிவிலா மாயையே !
மதில்மேல் பூனைக்கு மதிலென்ன தடையோ?
விதியைத் தூற்றிட வெற்றிடம் நிரம்புமோ?
நாரதர் இன்றியே நாளுக்கோர் கலகமிங்கே;
ஊருக்கே உலையாக உருமாறும் கலவரங்கள்.
நேர்வழிப் பாதையை நடுவினில் அடைத்திட,
சேரும் பாதைகளில் சந்தைபோல் நெரிசல்கள்.
பரமபதப் பாதையிலே படிப்படியாச் செல்வதோ ?
பரிவாரம் படைகொண்டு போராடித் தோற்பதோ?
விரிந்ததோர் நெடுஞ்சாலை வழிமுட்டி நின்றிட
சரியான சந்துகளும் சக்கரத்தின் வியூகமே .
எதுக்கெது சரியென்னும் புதுப்புது குழப்பத்தால்,
பதைத்திடும் மனம்கூட பயணத்தின் தடையே ;
நதியின் பாதைக்கு நாளுமதன் வேகமெனின்,
பதித்திடும் பாதத்தின்,வழித்தோழன் வித்தகமே.
பூதமெனும் போலிகளால் பெருமூச்சு வாங்காது,
பாதையின் தடையகற்றும் பாசுரம், மனபலமே.
ப.சந்திரசேகரன் .
A good one.Your last poem that you sent me is a good poem that has propaganda value.
ReplyDeleteThank you SRM for your your response to my poem.
ReplyDelete