மாயா!
மதியும் மமதையும் மனமென்றுச் சொல்லி
நதியின் எழுச்சியுடன் நரன்வலம் முடிப்போம் ;
இதயம் துடித்தலே இதிகாசமென் றுரைத்து
சிதறியச் சுவாசத்தில் சிதையாய் கிடப்போம் ;.
சதையும் எலும்பும் உதவா நிலையில்,
விதியைப் புறங்கூறி விடை பெறுகையில்,
புதையவோ மண்ணில் விதையெனப் பதிந்து?
கதியற்று எரியவோ கடைசிக் கனலாய்?.
எதுபொய் எதுமெய் என்றறியா வாழ்வில்,
பொதுவெனப் போற்றுதல் மாயையின் மாட்சியே.
ப. சந்திரசேகரன் .
மதியும் மமதையும் மனமென்றுச் சொல்லி
நதியின் எழுச்சியுடன் நரன்வலம் முடிப்போம் ;
இதயம் துடித்தலே இதிகாசமென் றுரைத்து
சிதறியச் சுவாசத்தில் சிதையாய் கிடப்போம் ;.
சதையும் எலும்பும் உதவா நிலையில்,
விதியைப் புறங்கூறி விடை பெறுகையில்,
புதையவோ மண்ணில் விதையெனப் பதிந்து?
கதியற்று எரியவோ கடைசிக் கனலாய்?.
எதுபொய் எதுமெய் என்றறியா வாழ்வில்,
பொதுவெனப் போற்றுதல் மாயையின் மாட்சியே.
ப. சந்திரசேகரன் .
No comments:
Post a Comment