Sunday, June 2, 2019

பெருக்குமோ,இளைக்குமோ?

பணம் பெருத்திட
நாணயம் இளைத்தது; 
சொகுசு பெருத்திட
உழைப்பு இளைத்தது; 
மதம் பெருத்திட
இறைநெறி இளைத்தது; 
சாதீயம் பெருத்திட, 
சமத்துவம் இளைத்தது; 
அதிகாரம் பெருத்திட
அன்பு இளைத்து; 
ஆசைகள் பெருத்திட, 
தேவைகள் இளைத்தது; 
ஆதிக்கம் பெருத்திட
நிர்வாகம் இளைத்தது;
வழக்குகள் பெருத்திட
தீர்ப்புகள் இளைத்தது;
சர்ச்சைகள் பெருத்திட, 
சரித்திரம் இளைத்தது;  
வாகனம் பெருத்திட
சாலைகள் இளைத்தது; 
சுயநலம் பெருத்திட
சேவைகள் இளைத்தது; 
பொருமல் பெருத்திட, 
பொறுமை இளைத்தது;  
இறுக்கம் பெருத்திட, 
இல்லறம் இளைத்தது; 
குற்றம் பெருத்திட, 
குணமெலாம் இளைத்து; 
சுற்றம் பெருத்திட,
சொந்தம் இளைத்து; 
சுதந்திரம் பெருத்திட, 
பொறுப்புகள் இளைத்தது; 
ம் பெருத்திட, 
தருமம் இளைத்தது; 
வன்மம் பெருத்திட, 
வாழ்வே இளைத்தது. 
பெருத்தது இளைத்திடின், 
இளைத்தது பெருக்குமோ? 
ப.சந்திரசேகரன் .  

No comments:

Post a Comment