உன் புகைப்பழக்கப் புத்தகத்தின்
பயன்படுத்திய பக்கங்கள்
நைந்துபோனதைப் பார்த்தாயா?
உன் மூச்சின் மூலதனம்
முழுவதுமாய் முடங்கிப்போனது;
உன் நுரையீரல் நூலிழையில்
நின்றுகொண்டிருக்கிறது.
உன் நிகோடின் நச்சு மணத்தை,
கொரோனா கொண்டாடுகிறது.
இழுக்கும் புகையின் இருட்டடிப்பால்,
இரத்தநாளங்கள் சுருண்டுபோகின்றன;
பக்கெட் பக்கெட்டாய் நீரூற்றி
கைகளைக் கழுவினாலும்,
உன் பாக்கெட்டில் சிகரெட்
உள்குத்தாய் உள்ளவரை,
நீரெல்லாம் விழலுக்கிறைத்ததே!
மூச்சை இழுக்கும் நுரையீரலுக்கும்,
ருசியை ஈர்க்கும் கல்லீரலுக்கும்,
புகையும் மதுவுமே புதைகுழிகள் !
பாட்டில் பாட்டிலாய் வாங்கு சரக்கு;
சூட்டின் சுதியில் சோகம் பெருக்கு !
அடுத்துக் கெடுக்கும் பழக்கம் அனைத்தும்,
படுத்தும் நோயினால்,படுக்கைகள் கூட்டும்.
படித்துறை கடந்திடா நதியின் பக்குவம்,
படியை இடித்திடும் நீரின் கணக்காம்!
கெடுத்திடும் எதனையும் சுட்டிக் காட்டலே,
உடுத்தும் கவசமாய்,ஊனுயிர் காக்குமாம்.
ப.சந்திரசேகரன் .
பயன்படுத்திய பக்கங்கள்
நைந்துபோனதைப் பார்த்தாயா?
உன் மூச்சின் மூலதனம்
முழுவதுமாய் முடங்கிப்போனது;
உன் நுரையீரல் நூலிழையில்
நின்றுகொண்டிருக்கிறது.
உன் நிகோடின் நச்சு மணத்தை,
கொரோனா கொண்டாடுகிறது.
இழுக்கும் புகையின் இருட்டடிப்பால்,
இரத்தநாளங்கள் சுருண்டுபோகின்றன;
பக்கெட் பக்கெட்டாய் நீரூற்றி
கைகளைக் கழுவினாலும்,
உன் பாக்கெட்டில் சிகரெட்
உள்குத்தாய் உள்ளவரை,
நீரெல்லாம் விழலுக்கிறைத்ததே!
மூச்சை இழுக்கும் நுரையீரலுக்கும்,
ருசியை ஈர்க்கும் கல்லீரலுக்கும்,
புகையும் மதுவுமே புதைகுழிகள் !
பாட்டில் பாட்டிலாய் வாங்கு சரக்கு;
சூட்டின் சுதியில் சோகம் பெருக்கு !
அடுத்துக் கெடுக்கும் பழக்கம் அனைத்தும்,
படுத்தும் நோயினால்,படுக்கைகள் கூட்டும்.
படித்துறை கடந்திடா நதியின் பக்குவம்,
படியை இடித்திடும் நீரின் கணக்காம்!
கெடுத்திடும் எதனையும் சுட்டிக் காட்டலே,
உடுத்தும் கவசமாய்,ஊனுயிர் காக்குமாம்.
ப.சந்திரசேகரன் .
அட்டகாசம் Sr
ReplyDelete