விட்டுப் பிரிகையில்
விட்டுக் கொடுப்பதை,
விட்டுக் கொடுக்காது
விட்டுப் பிரிவதோ?
கெட்டுப் போகையில்
கெட்டுப் போகாது,
கெட்டிக் காரனாய்
விட்டுப் பிரிவதோ?
திட்டிய தீயோரை,
கொட்டம் அடக்கி
பெட்டிப் பாம்பாக்கி
விட்டுப்பிரிவதோ?
முட்டிய கன்றது
முட்டிய மடிதனில்
கிட்டாப் பாலென,
கிட்டாப் புகழினை
விட்டுப் பிரிவதோ?
சட்டிப் பானையில்
ஒட்டிய பருக்கையை
தட்டி உடைத்தென,
விட்டுப் பிரிவதோ?
வட்டமாய் வரிசையாய்
வாட்டிய வாழ்வினை,
எட்டி உதைத்து
விட்டுப் பிரிவதோ?
வட்டியும் அசலுமாய்
கொட்டிய பணமெலாம்
கொட்டிச் சிரிக்கையில்
விட்டுப்பிரிவதோ?
பெட்டியில் பணமிலா
பெருமிதக் களிப்பில்,
முட்டையின் ஒடென
விட்டுப் பிரிவதோ?
எட்டாத் தொலைவினில்
ஈட்டிடும் பிள்ளைகள்
இறுதிச் சடங்கில்
எட்டா வண்ணம்,
விட்டுப் பிரிவதோ?
கட்டையில் போவதும்
காரினில் போவதும்
கெட்டியாய் உயிரினைப்
பற்றிடா உடலினை,
'கெட்டியாய்ப் பிடி'யென
தோளினில் சுமப்போர்
அட்டையாய்ப் பற்றி
அந்தமாய் வைத்திட,
சட்டியை உடைத்தபின்
விட்டுப் பிரிவதோ?
ஒட்டிய உறவுகள்
ஒட்டுதற் கஞ்சிட ,
கெட்டதோர் நோயினால்
கெட்டதோர் உடலென,
வெட்டியான் தீண்டாமல்
விட்டுப் பிரிவதோ?
ப.சந்திரசேகரன் .
விட்டுக் கொடுப்பதை,
விட்டுக் கொடுக்காது
விட்டுப் பிரிவதோ?
கெட்டுப் போகையில்
கெட்டுப் போகாது,
கெட்டிக் காரனாய்
விட்டுப் பிரிவதோ?
திட்டிய தீயோரை,
கொட்டம் அடக்கி
பெட்டிப் பாம்பாக்கி
விட்டுப்பிரிவதோ?
முட்டிய கன்றது
முட்டிய மடிதனில்
கிட்டாப் பாலென,
கிட்டாப் புகழினை
விட்டுப் பிரிவதோ?
சட்டிப் பானையில்
ஒட்டிய பருக்கையை
தட்டி உடைத்தென,
விட்டுப் பிரிவதோ?
வட்டமாய் வரிசையாய்
வாட்டிய வாழ்வினை,
எட்டி உதைத்து
விட்டுப் பிரிவதோ?
வட்டியும் அசலுமாய்
கொட்டிய பணமெலாம்
கொட்டிச் சிரிக்கையில்
விட்டுப்பிரிவதோ?
பெட்டியில் பணமிலா
பெருமிதக் களிப்பில்,
முட்டையின் ஒடென
விட்டுப் பிரிவதோ?
எட்டாத் தொலைவினில்
ஈட்டிடும் பிள்ளைகள்
இறுதிச் சடங்கில்
எட்டா வண்ணம்,
விட்டுப் பிரிவதோ?
கட்டையில் போவதும்
காரினில் போவதும்
கெட்டியாய் உயிரினைப்
பற்றிடா உடலினை,
'கெட்டியாய்ப் பிடி'யென
தோளினில் சுமப்போர்
அட்டையாய்ப் பற்றி
அந்தமாய் வைத்திட,
சட்டியை உடைத்தபின்
விட்டுப் பிரிவதோ?
ஒட்டிய உறவுகள்
ஒட்டுதற் கஞ்சிட ,
கெட்டதோர் நோயினால்
கெட்டதோர் உடலென,
வெட்டியான் தீண்டாமல்
விட்டுப் பிரிவதோ?
ப.சந்திரசேகரன் .
உயிரிடம் , ஒவ்வொரு பிறவிகளி லும்
ReplyDeleteஓவ்வொரு மனிதனும் எத்தனை முறை எத்தனை விதமாக கேட்டாலும் எமன் வரவை மாத்திரமே ஓவ்வொரு உயிரும் எதி பார்த்து காத்திருக்கிறது ... அருமையான இடுகை,,,⛲
Perfect perception.
Delete