நீரில் கண்டமோ?,நெருப்பில் கண்டமோ?,
நோயில் கண்டமோ?,வாயில் கண்டமோ?,
ஊரினில் ஒவ்வொரு நாளும் உலவிடும்,
ஓய்ந்திடா உயிர்பலி,உலுக்கிடும் கண்டமே !
காவலில் கண்டமோ?ஏவலில் கண்டமோ?
காரிருள் கடக்கையில் காலிடறிக் கண்டமோ?
ஆவலில் கண்டமோ?ஆருடக் கண்டமோ?
ஓரிடம் ஒழியா ஊழ்வினைக் கண்டமோ?
மத்தள இடியென மானுடம் சகிப்பது
மாரகம் தடுத்திடும் மரணப் போராம்!
தத்தளித்தே தினம் தன்னுயிர் காத்திட,
போரிடும் பூமியில்,புதைவது கண்டமே!
பாலியல் பலிகளும்,பாய்லர் பலிகளும்,
பாதாளச் சாக்கடை,பறித்திடும் உயிர்களும்,
சாலையில் சகஜமாய் சரிந்திடும் உயிர்களும்,
சேதாரம் கூட்டிடும் சிரசறுக் கண்டமே!
பாரினில் கண்டம் பலப்பல இரகமாம்;
மாயமாய் வாழ்வினில் மடிவது எல்லாம்,
நேரிடைக் காட்சியாய் நெட்டிடும் நிகழ்வில்
மாய்ந்திடும் மாந்தரின் மயிரிழைக் கண்டமே!.
ப.சந்திரசேகரன் .
நோயில் கண்டமோ?,வாயில் கண்டமோ?,
ஊரினில் ஒவ்வொரு நாளும் உலவிடும்,
ஓய்ந்திடா உயிர்பலி,உலுக்கிடும் கண்டமே !
காவலில் கண்டமோ?ஏவலில் கண்டமோ?
காரிருள் கடக்கையில் காலிடறிக் கண்டமோ?
ஆவலில் கண்டமோ?ஆருடக் கண்டமோ?
ஓரிடம் ஒழியா ஊழ்வினைக் கண்டமோ?
மத்தள இடியென மானுடம் சகிப்பது
மாரகம் தடுத்திடும் மரணப் போராம்!
தத்தளித்தே தினம் தன்னுயிர் காத்திட,
போரிடும் பூமியில்,புதைவது கண்டமே!
பாலியல் பலிகளும்,பாய்லர் பலிகளும்,
பாதாளச் சாக்கடை,பறித்திடும் உயிர்களும்,
சாலையில் சகஜமாய் சரிந்திடும் உயிர்களும்,
சேதாரம் கூட்டிடும் சிரசறுக் கண்டமே!
பாரினில் கண்டம் பலப்பல இரகமாம்;
மாயமாய் வாழ்வினில் மடிவது எல்லாம்,
நேரிடைக் காட்சியாய் நெட்டிடும் நிகழ்வில்
மாய்ந்திடும் மாந்தரின் மயிரிழைக் கண்டமே!.
ப.சந்திரசேகரன் .
Very appreciative.
ReplyDeleteகாட்சியாய் நெட்டிடும்....பொருள் புலப்பட வில்லை என்றாலும் இத்தனை கண்டங்கள் உயிருக்கு இருப்பதால் தான் உயிரின் விலை மதிப்பில்லாத உயரம் தொட்டது போலும்...⛲
ReplyDelete