திருமணம் அன்றும் இன்றும் :-
===========================
பரிசம் போடவே பந்தலுண்டாம் அன்று ;
பந்தக்காலின்றியே பல திருமணமாம் இன்று
முதலிரவு அன்றே முதலில் பேசினர் தம்பதியர் அன்று .
முதலிரவில் கூட பேசுவதற்கு ஒன்றுமில்லையாம் இன்று ;
மூன்று நாள் கொண்டாட்டத் திருமணமாம் அன்று
மூன்று விருந்துக்கே திண்டாட்டமாம் இன்று .
கண்டவர் கலப்பராம் திருமணப் பேச்சில் அன்று .
கூடப் பிறந்தவரே குரல்கொடுக்க யோசிப்பர் இன்று.
மெய்யோடு சிறப்பாய், சீர்வரிசை அன்று
கையில் மொய்யோடு நீள்வரிசை இன்று.
நட்புக்கும் உறவுக்கும் நேரம் நிறைய உண்டு அன்று .
உட்புகுந்து வெளிவரவே நேரமில்லை இன்று .
வசதியில்லா வாழ்வில் கூடுதலே மண்வாசம்;
வசதியின் வேட்டையில் பணம் ஒன்றே பேசும்.
ப.சந்திரசேகரன்.

No comments:
Post a Comment