Saturday, May 19, 2018

என்றும் என் மரப்பாச்சி

                         (மறுப்பதிவு)





கைய்யோடும் மார்போடும் இறுக்கிப் பிடிச்சுகிட்டு,
பொய்யில்லா பேச்சோட 
பொத்திவெச்ச மரப்பாச்சி.
பகலோடும் இரவோடும் 
பகிர்ந்துகிட்ட கதையெல்லாம்,
அகலாத நெனவாச்சு;
அதுவே என்மனசாட்சி .
என்னாதான் அலைபேசி
இன்னைக்கு இருந்தாலும்,
மரப்பாச்சி இருந்தப்போ  
உசிருக்குள் உறவாச்சு.
தொலைதூர பேச்சுக்கு 
அலைபேசி இருந்தாலும், 
நெலையான பேச்சுக்கு மரப்பாச்சி இருந்துச்சுனா,
மலபோல சோகமெல்லாம்
மளமளன்னு கொறஞ்சுபோகும்.
என்னவெல்லாம் இழந்துட்டோம்னு எண்ணிப் பார்க்கையில,
முன்னால  முழுநிலவா மொளச்சுவரும் மரப்பாச்சி.
கண்ணுக்குத் தெரியாத 
அலைபேசி பேச்செல்லாம்,
தண்ணியில எழுதின, 
தவறிப்போகும் எழுத்தாச்சு;
மண்ணுக்குள்ள வேர்செழிச்ச 
பொன்வயலே மரப்பாச்சி.
கண்ணுக்குள் நிலவாகி
களிப்பூட்டும் ஔியாச்சு.

                                                                                   ப.சந்திரசேகரன் .  

No comments:

Post a Comment