Friday, May 25, 2018

மாயம்!




மனதை மாய்த்திடும் மயானமே வெறுப்பு; 
அன்பின் அதிர்வுகள் அதனுள் மாயும்.
கூடிடும் கூட்டம் குறுக்குச் சுவராகின்,
மேடையின் மரபுகள் மேய்தலில் மாயும்.
கட்டி அணைப்பது நட்போ பகையோ?
முட்டிய பின்னரே,கொம்பதன் கூரறியும்.
தட்டினில் இருப்பது உணவோ நஞ்சோ?
தட்டிக் கழித்திடா உணவே தன்நலம்.
பணமும் பாசமும் பரிசம் போடுமெனில்,
உணவும் நஞ்சும் ஒன்றிடும் நிலையே!
காதலின் சீதனம் அமிலமோ ஆயுதமோ,
சாதியின் சேதாரமே காதலின் ஆயுள்.
வங்கியின்  வைப்புகள் வசதியாய் வெளியேற,
பொங்கிடும் மோசடியில்,புதுப்புது மாயங்கள் !
நியாயத்தை தேடிநாம் நாள்தோறும் காண்பது,
சாயம் வெளுத்ததோர் சத்திய  வேட்டையே!
தீயாய் எரிக்கும் தீமைகள் ஆட்டுவிக்க,
வாயின் வார்த்தையில் வாய்மையே மாயம்
                                                               ப.சந்திரசேகரன் .  

No comments:

Post a Comment