சர்க்கரை இனிப்பிற்கு கரையேது முண்டோ ?
ஊர்க்குருவி அறிந்த ஊரெந்த ஊரோ ?
வில்லுப் பாட்டுகள் அம்பெறிவ துண்டோ ?
கொல்லன் பட்டறை கொல்லும் பட்டறையோ?
பிள்ளைப் பூச்சிக்கு எத்தனை பிள்ளையோ?
கிள்ளுக் கீரை கிள்ளுமோ கதறுமோ ?
வெள்ளை மனசை புகைப்படம் காட்டுமோ?
தள்ளாத வயதைத் தள்ளுவது மரணமோ?
சிண்டு முடிதல் முடிக்கவோ தொடரவோ?
குண்டுச் சட்டி அதனெடை அறியுமோ ?
தண்டச் சோறு தீனியோ தொல்லையோ ?
அண்டங் காக்கை காக்குமோ அண்டம் ?கத்துக் குட்டிகள் கத்துமோ பிதற்றுமோ ?
பத்தாம் பசலியை பதினொன்று தொடருமோ ?
பொத்தாம் பொதுவாய் பேசிடும் அனைத்தும்
வித்தகர் சொல்லோ,விளங்கிடும் பொருளோ?
ப.சந்திரசேகரன் .
No comments:
Post a Comment