Wednesday, May 30, 2018

நரபலிகள்

கருமேகம் வலம்வந்து கருத்த  வானம்போல்,
பெருங்கூட்டம் திரளாகிக்  கருகிய சாலையில்,
ஆர்ப்பாட்டம் ஆள்கூட்டி, போர்க்களமாய் மாறிட,
நேர்ப்பாதை நெறிமறந்து, நரபலிகள் நாடிதே!

வேடிக்கை பார்த்தவரும் பாடையில் படுத்திடவே,

கோடிட்ட ஐயங்கள், கூட்டியதே அதிகாரம்;
கூடியதோர்  கூட்டத்தில் கொடுங்காற்று வீசிட ,
தேடிச் சுட்டனரோ தடையின்றிச் சுட்டனரோ?
நாடி நரம்பெல்லாம் நரகத்தின் தாக்கத்தில்,
ஆடித் தீர்த்ததுவே,ஆள்கொய்யும் ஆணவத்தில். 

மார்பில் கையடித்து மயானத்தை சபித்தாலும்,
வார்த்தை வாளாகி,வன்கொடுமை எதிர்த்தாலும்  
நேரடியாய் பொறுப்பேற்று நரபலிக்கு பதில்சொல்ல, 
யாரிங்கே அதிகாரம்? எவர்கையில் கடிவாளம்? 
                                                          ப.சந்திரசேகரன் .      

No comments:

Post a Comment