Thursday, May 31, 2018

நான் யார்? நீ யார்?

"நான் யார்? நான் யார்? நீ யார்?
நாலும் தெரிந்தவர் யார் யார்?"
போராடியது யார்?
போராடச் சொன்னது யார்?
சுட்டது யார்?
சுடச் சொன்னது யார்?
செத்தவர் யார்? 
புதைத்தவர் யார்? 
எரித்தவர் யார்? 
கமல் யார்? பெரியார்?
ரஜினி யார்? எம் ஜி ஆர்?
நல்லவர் யார்? 
கெட்டவர் யார்?
சுடுகாட்டு வழி
அமைத்தவர் யார்?
பாபிகள் யார்?
சுமப்பவர் யார்?
அரசியலில் யார்?
ஆன்மீகத்தில் யார்?
இரண்டிலும் யார்?
ஊரைக் கொள்ளையடித்து
உலையில் போட்டவர் யார்?
போராடி  போராடி
உருக்குலைந்தது யார்?
கருப்பு வெள்ளையாய்
கரன்சி பார்ப்பவர் யார்?
கரன்சி இன்றியே
கருத்துப்போனவர் யார்?
மாயையில் மயங்கிடும்
தமிழனின்  உணர்வை
தட்டி எழுப்புவது யார் ?
                           ப.சந்திரசேகரன் .      

Wednesday, May 30, 2018

நரபலிகள்

கருமேகம் வலம்வந்து கருத்த  வானம்போல்,
பெருங்கூட்டம் திரளாகிக்  கருகிய சாலையில்,
ஆர்ப்பாட்டம் ஆள்கூட்டி, போர்க்களமாய் மாறிட,
நேர்ப்பாதை நெறிமறந்து, நரபலிகள் நாடிதே!

வேடிக்கை பார்த்தவரும் பாடையில் படுத்திடவே,

கோடிட்ட ஐயங்கள், கூட்டியதே அதிகாரம்;
கூடியதோர்  கூட்டத்தில் கொடுங்காற்று வீசிட ,
தேடிச் சுட்டனரோ தடையின்றிச் சுட்டனரோ?
நாடி நரம்பெல்லாம் நரகத்தின் தாக்கத்தில்,
ஆடித் தீர்த்ததுவே,ஆள்கொய்யும் ஆணவத்தில். 

மார்பில் கையடித்து மயானத்தை சபித்தாலும்,
வார்த்தை வாளாகி,வன்கொடுமை எதிர்த்தாலும்  
நேரடியாய் பொறுப்பேற்று நரபலிக்கு பதில்சொல்ல, 
யாரிங்கே அதிகாரம்? எவர்கையில் கடிவாளம்? 
                                                          ப.சந்திரசேகரன் .      

Tuesday, May 29, 2018

சொல்லும் பொருளும்!


சர்க்கரை இனிப்பிற்கு கரையேது முண்டோ ?
ஊர்க்குருவி அறிந்த ஊரெந்த ஊரோ ?
வில்லுப் பாட்டுள் அம்பெறிவ துண்டோ ?
கொல்லன் பட்டறை கொல்லும் பட்டறையோ? 

பிள்ளைப் பூச்சிக்கு எத்தனை பிள்ளையோ? 
கிள்ளுக் கீரை கிள்ளுமோ கதறுமோ ? 
வெள்ளை மனசை புகைப்படம் காட்டுமோ? 
தள்ளாத வயதைத் தள்ளுவது மரணமோ?

சிண்டு முடிதல் முடிக்கவோ தொடரவோ? 
குண்டுச் சட்டி அதனெடை அறியுமோ ?
தண்டச் சோறு தீனியோ தொல்லையோ ? 
அண்டங் காக்கை  காக்குமோ அண்டம் ?

கத்துக் குட்டிகள் கத்துமோ பிதற்றுமோ ?
பத்தாம் பசலியை பதினொன்று தொடருமோ ?
பொத்தாம் பொதுவாய் பேசிடும் அனைத்தும் 
வித்தகர் சொல்லோ,விளங்கிடும் பொருளோ? 
                                                   ப.சந்திரசேகரன் .      


Sunday, May 27, 2018

Oh,the Tweet!

Oh,the Tweet!
Words full of heat.
Thoughts hardly greet;
But slyly aim at Power's seat.
No emotions excepting hate,
Pretensions plenty,as if to abate,
People's awfully ailing fate.

Oh,the Tweet!
To sell ideas in the street,
From one's field,to happily beat
One's bush,to firm up one's feet.
No motive other than the self,
For the promotion of one's stuff,
Through tablets of truth or bluff.

Oh,the Tweet!
A pastime charmingly sweet,
Shared with endearing feat
Of ideas and facts,necessary and neat.
It is a passion full of genuine geniality,
That looks forward to a healthy society,
To serve the dear dreams of humanity.

Oh,the power of a Tweet
Speaks of its use discreet. 
                        P. Chandrasekaran.

Friday, May 25, 2018

மாயம்!




மனதை மாய்த்திடும் மயானமே வெறுப்பு; 
அன்பின் அதிர்வுகள் அதனுள் மாயும்.
கூடிடும் கூட்டம் குறுக்குச் சுவராகின்,
மேடையின் மரபுகள் மேய்தலில் மாயும்.
கட்டி அணைப்பது நட்போ பகையோ?
முட்டிய பின்னரே,கொம்பதன் கூரறியும்.
தட்டினில் இருப்பது உணவோ நஞ்சோ?
தட்டிக் கழித்திடா உணவே தன்நலம்.
பணமும் பாசமும் பரிசம் போடுமெனில்,
உணவும் நஞ்சும் ஒன்றிடும் நிலையே!
காதலின் சீதனம் அமிலமோ ஆயுதமோ,
சாதியின் சேதாரமே காதலின் ஆயுள்.
வங்கியின்  வைப்புகள் வசதியாய் வெளியேற,
பொங்கிடும் மோசடியில்,புதுப்புது மாயங்கள் !
நியாயத்தை தேடிநாம் நாள்தோறும் காண்பது,
சாயம் வெளுத்ததோர் சத்திய  வேட்டையே!
தீயாய் எரிக்கும் தீமைகள் ஆட்டுவிக்க,
வாயின் வார்த்தையில் வாய்மையே மாயம்
                                                               ப.சந்திரசேகரன் .  

Wednesday, May 23, 2018

Mr.Power.

I was a child until I was invaded.
I knew to rule from where I learnt to rule.
My mask of power was others' mandate.
I chose the right weapon to fight,
When my rivals could not decide upon
What their weapons really were.
I began to expand,with my new gadgets,
Whose game plan I alone knew.
It is the snake that knows the rat holes
And the anthills,on its zig zag course.
I neither phoo phoo the progeny,
Nor do I care to woo the posterity.
I design my profile to fit into Time's frame
And pass power balls in Time's space.
I shout with the magnitude of fabled facts,
That make my voice wield its valour.
The listeners have a mind for magic;
And magic makes more minds to listen to.
The volume of my voice outweighs,
The weight of ideas,facts and figures, 
Not meant for the streets and the mobs.
Of course,the volume of my voice does owe
Its reach, to invisible recharging loads.
My voice is ever the winning sword,
Playing hide and hunt from its sheath
Made of Power, of the Order of the Tiger,
In the guise of William Blake's white Lamb.
                                        P.Chandrasekaran.  

Saturday, May 19, 2018

என்றும் என் மரப்பாச்சி

                         (மறுப்பதிவு)





கைய்யோடும் மார்போடும் இறுக்கிப் பிடிச்சுகிட்டு,
பொய்யில்லா பேச்சோட 
பொத்திவெச்ச மரப்பாச்சி.
பகலோடும் இரவோடும் 
பகிர்ந்துகிட்ட கதையெல்லாம்,
அகலாத நெனவாச்சு;
அதுவே என்மனசாட்சி .
என்னாதான் அலைபேசி
இன்னைக்கு இருந்தாலும்,
மரப்பாச்சி இருந்தப்போ  
உசிருக்குள் உறவாச்சு.
தொலைதூர பேச்சுக்கு 
அலைபேசி இருந்தாலும், 
நெலையான பேச்சுக்கு மரப்பாச்சி இருந்துச்சுனா,
மலபோல சோகமெல்லாம்
மளமளன்னு கொறஞ்சுபோகும்.
என்னவெல்லாம் இழந்துட்டோம்னு எண்ணிப் பார்க்கையில,
முன்னால  முழுநிலவா மொளச்சுவரும் மரப்பாச்சி.
கண்ணுக்குத் தெரியாத 
அலைபேசி பேச்செல்லாம்,
தண்ணியில எழுதின, 
தவறிப்போகும் எழுத்தாச்சு;
மண்ணுக்குள்ள வேர்செழிச்ச 
பொன்வயலே மரப்பாச்சி.
கண்ணுக்குள் நிலவாகி
களிப்பூட்டும் ஔியாச்சு.

                                                                                   ப.சந்திரசேகரன் .  

Thursday, May 17, 2018

எண்ணங்களுக்கு வால்முளைக்க,

மனதிற்குள் பல மரங்கள்!
எண்ணங்களுக்கு வால்முளைக்க,
எதிர்மறைத் தாவல்களால் 
கிளைகளின் கிளர்ச்சியில்,
தளிறுகள் தடம் புரளுகின்றன.
மதியினை சூது கவ்வுமோ,
சூதினை மதி கவ்வுமோ,
கருணைக் கரங்கள் 
சொர்க்க வாசலை 
தட்டிடும் வேளையில், 
பாபத்தின் கால்கள் 
சாபச் சுவடுகளின்றி, 
நான்மாட வீதிவழி 
நரகத்தைச் சுற்றிவந்து, 
சொர்க்கம் சுவைக்கின்றன.
ஆலய தரிசனத்தில், 
ஒளியும் உண்டியலும்,
விழியிடைக் காட்டும்  
ஒருநூல் இடைவெளியில்,
சொர்க்கமும் நரகமும்
இடம் பெயருகின்றன.
சிலைகள் கடவுளோ, 
லையேறிய கல்லோ !
ரங்களும் கால்களும் 
வாயில்வழி வெளியேற, 
பாபிகளின் சொர்க்கத்தில்,
சாபங்கள்  என்றும் 
பூபாளம் இசைக்கின்றன
புண்ணியத்தின் கரங்கள் 
சொர்க்க வாசலை 
தட்டித் தளர்ந்து,
தலை சாய்கின்றன.
            ப.சந்திரசேகரன் .

Wednesday, May 16, 2018

Doors, Front and Back!

'Enter the dragon'!
All doors are made for an easy fall
Like a fragile dressing on the wall.
The front and back doors are there,
For a free for all entry from anywhere.
As the bard's witches were aware,
'Fair is foul,foul is fair'is a truth bare.
The dragons are a nightmare
That Justice shudders to dare.
Dr.Jekyll's genuine keys are set aside,
By the blow of hammers of Mr. Hyde.
The downing disciples of Machiavelli, 
Could manipulate doors to suit entry.
When God chooses to guard the Macabre,
His divine halo becomes a design faker. 
Front or back, all doors take us home,
As all roads are said to lead to Rome.
Once the dragon enters its deviant zone,
The exit doors for justice,are easily shown.
                                           P. Chandrasekaran.

Monday, May 14, 2018

சில நேரங்களில் சில வலிகள் ,

சில நேரங்களில் சில வலிகளை, 
தாங்கித்தான் ஆகவேண்டும். 
ஒருவரின் வலி மற்றொருவர் வழி. 
எனக்குத் தெரிந்தே, 
நான் தொலைந்து போனேன்; 
சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட விலையில், 
என் வாக்குகள் விலைபோயின! 
உன் வாக்குகளும்தான், 
உனக்குத் தெரிந்தே, 
ஒரு விலைக்கு உன்னை கடத்தின. 
உணவுப்பொட்டலங்களுக்காக, 
ஊர்மாறிக் கூடினோம்; 
இஷ்ட திரவங்கள் நம்மை திடமாக்கின! 
ஐந்தாண்டுகளில் ஒருமுறை மட்டுமே, 
நிர்ணயிக்கப் படும் நமது விலை, 
வலிக்கத்தான் செய்கிறது. 
சில நேரங்களில் சில வலிகளை 
தாங்கித்தான் ஆகவேண்டும். 
பொய்களை நாம் கண்டுகொள்வதில்லை. 
ஊழலின் கூடாரத்தில், 
ஐந்தாண்டுக்கொருமுறை, 
நீயும் நானும் இளைப்பாறுகிறோம் என்பது, 
சற்று வலிக்கத்தான் செய்கிறது. 
ஆனாலும் சில நேரங்களில் சில வலிகளை, 
நாம் தாங்கித்தான் ஆகவேண்டும். 
                                   ப.சந்திரசேகரன் .

கெட்டதோர் விளையாட்டு

பேச்சில் தவறிழைக்க,
பேச்சே ஏச்சாகி,
கூச்சல் குழப்பத்தில்,
தவறுகள் தப்பிக்க,
எழுத்தில் நாகரீகம்,
இறங்கி வசையாகி, 
வசமாய் மாட்டியவர்,
வழக்கம்போல் நழுவிவிட,
சமூக வலைத்தளத்தில்,
சந்தி சிரித்தாலும்,
சட்டத்தின் பிடிக்குள்ளே
சிக்காமல் சொடக்குப்போடும்,
சாமர்த்திய சதுரங்கம்,
கெட்டதோர் விளையாட்டாம். 
                             ப.சந்திரசேகரன் .

Saturday, May 12, 2018

கிடுக்கிப் பிடிகள்

வெட்டியது மின்னலோ,வீச்சு அருவாளோ?
வெட்டியது வீழ்ந்திடின் வெட்டியான் வசமே!.
கொட்டியது சொல்லோ,சிந்திய பொருளோ?
கொட்டியது வலித்திடின் தேளின் பொருட்டே . 
முட்டியது கன்றோ கன்றதன் கொம்போ,
முட்டியது கொம்பெனின் முட்டியதால் முறிவே!
கிட்டாப் பொருளினை,கிறுக்குடன் விரட்டுதலும்,
ஒட்டாத உறவுகளை உயர்வாய் நினைத்தலும், 
முட்டாள் தனத்தின் முடிவிலா முனைவுகளே!   
வெட்டியது,கொட்டியது,முட்டியது,முடிவில்,
விட்டொழிக்க இயலா விலங்குப் பிடியே.
குட்டிக் கரணம் குறிவைத்து போட்டாலும்,
சிட்டுக் குருவிகள் சிதைந்ததோர் உலகில்,
சிட்டாகப் பறக்கும் சிந்தனையும் சிறையே. 
                                                           ப.சந்திரசேகரன் .  

Thursday, May 10, 2018

Mute Love



I gestured to you that you looked lovely;
But you called it frivolous falsehood.
Perhaps you wanted me to SAY,
You were beautiful beyond the'look'.
Words are the marked musical notes,
Composed by the mad swing movement 
Of the vocal cords,the palates hard and soft
And the clueless lips,in tune with the larynx.

The tongue might turn the lyricist,for a while.
But the lungs sing their breath,long and short.
And the heart keeps beating its percussion throbs.
Rest your ears for a while,on my singing chest,
To listen to the music that springs spiritedly
From my heart,with its hoary,hearty rhythms.

Dumbness has its unheard,low profile lungs,
Panting in and out,bunches and bulks of, 
Breezy blossoms,bearing their pricking thorns.
What your frail eyes pretend not to be seeing,
And your earthen ears faltering to process,
Is happening heartily,in the mind's recess.
Lift your blinds to be on a one to one meet.
Unsaid love makes its awesome notes,off beat.
                                                 P.Chandrasekaran.

Tuesday, May 8, 2018

தாகத்திற்கும் யோகமில்லை

காவிரி நீர் 
காலம் காலமாய் 
கானல் நீரே! 
கடல் நீரை 
கடன் கேட்டால், 
கடல் அலைகள் 
பின் வாங்குகின்றன. 
நில நீரோ, 
பலதூரம் 
பாதாளம் படர்ந்தது  .
மேகத்துக்கு தூதுவிட்டால், 
வானம் 
வாய்தா கேட்கிறது. 
தாகத்திற்கு நீர்கேட்டு 
யாகமே நடத்தினாலும், 
சோகம் 
சொடக்கு போடுகிறது .
தமிழ் மண்ணில் ,
தாகத்திற்கும் யோகமில்லை! 
                              ப.சந்திரசேகரன் .  

Monday, May 7, 2018

நெரிசலில்

பூமியில பொறந்தோமா ?
இல்ல, சீமையிலே பொறந்தோமா? 
வரப்புல வளர்ந்தோமா ?  
இல்ல, விரைப்புல வளர்ந்தோமா? 
திரியில படிச்சோமா ? 
இல்ல, தெருவுல படிச்சோமா?
பெரிசா ஒரு கனவோ ?
இல்ல, பேராச கனவோ?
சிறிசா இருப்பவங்க,
உசிரக் குடுத்தாலும்
ஒசரப்போறதில்ல.
பூமியில நம்ம கஷ்டம்,
சாமிக்கே புரியவில்ல.
நெரிசலில் நமெக்கெல்லாம்,
சாமிகூடத்  தெரிவதில்ல. 
                       ப.சந்திரசேகரன் .  

Sunday, May 6, 2018

'நீட்'டிடம் மாட்டி

"என் கல்விக் கனவை
கற்பனைக் கதையாக நீ எழுத,
துணையோடு வந்த நான்
தனியாகத் திரும்புகிறேன்!
அவையத்து முந்தியிருக்கச் செய்த
என்துணை இயற்கை எய்தியதை,
அறியாமலேயே எங்கோ ஒரு மூலையில்,
என் கனவை நான் கலைத்தேன். 
நினைவு திரும்புகையில்,
என்னோடு துணையாக வந்த
என் தந்தை நினைவானார்.
'நீட்' எனும் தேர்வால்
மருத்துவம் கிடைக்கலாம்;
மாண்டுபோன தந்தை
மீண்டு வருவாரோ? 
ஒன்றை இழந்து 
ஒன்றை பெறுவேனோ? 
இரண்டையும் இழந்து 
இருட்டில் அடைவேனோ? 
'நீட்' என்ற உன்னிடம், 
மாட்டித் தவிப்பது 
நான் மட்டுமல்லவே." 
                    {மாணவரின் மனதோடு }  
                         ப.சந்திரசேகரன் .  

Saturday, May 5, 2018

அரசியல் பறவை

அரசியல் பறவைக்கு 
அதிவேகம் தருவது, 
ஆடிக் காற்றென 
ஆவேசம் கொண்டு, 
கூட்டினைக் கடக்கும், 
ஊழல் சிறகுகளே! 

ஊர்க்குருவிகள்
உயரப் பறந்து,
குடி பெயர்ந்து 
கோடிகள் திரட்டி,
குலம் செழித்தி
வலம் வருதலே, 
கொடிச்  சிறகாம்.

உண்டியல் குலுக்கி 
துண்டு விரித்து, 
தொண்டு புரிந்தி 
துவளாமல் யாசித்து, 
தன்னலத் தூசியை 
தூய்மைத் துண்டால் 
தூரத்தில் வீசிது
தொன்மை அரசியல். 

துண்டுகள் மாற்றி 
இண்டு இடுக்கெலாம் 
சுயநலம் சூடேற்றி, 
முண்டிப் பறக்குது
இன்றைய அரசியல். 

குண்டுக் கட்டாய் 
தூக்கி எறிந்தாலும், 
மீண்டும் எகிறுமே, 
அண்டம் அளந்திடும் 
ஆசையில் சிறகடிக்கும், 
அரசியல் பறவை. 
                      ப.சந்திரசேகரன் .      

Thursday, May 3, 2018

காதற்ற ஊசி.

காதற்ற  ஊசியில் நூலுக்கு நுழைவில்லை.
நூலறுந்த பட்டம் பறப்பதோ பகல்கனவில்.
பட்டம் மட்டுமே பதவிகள் சேர்ப்பதில்லை.
பதவியின் மமதையில்  பண்புகள் தோற்றிட,
கதவுகள் திறக்கா ஆலயம் போன்று,
உதவா பண்புகள் கல்லறை காணும்.
நதிகள் வறண்டிடின் கரைக்கென்ன வேலை?
புதியதாய் நதியேதும் புலருமோ பூமியில்? 
நிதியைச் சுரண்டி நீதியைப்  நெரித்திட, 
விதிகளும் படுகுழியில் விரைந்து புதையும்; 
விளையாத பயிருக்கு வேரென்ப துண்டோ? 
வளையாத வீம்பிற்கு வம்சமே பகையாம்!
நீளமாய் உயிர்காத்து நெஞ்சுரத்தில் நின்றாலும், 
நாளும் காலம், நகைப்போடு நமைக்கடக்கும். 
காலம் கடந்தாலும், கடந்தவர்க்கே முடிவன்றி,
காலம் ஒருபோதும் கால்நீட்டிப் படுப்பதில்லை. 
கோலங்கள் குறிசொல்லி காலமது கேட்குமோ? 
காலநூல் நுழையுமோ காதற்ற ஊசியில் ?
                                                        ப.சந்திரசேகரன் .      

Tuesday, May 1, 2018

Fifty,Fifty!.

From one's home to Nursing home
Hopes of a come back ardently roam.
The rush to the Intensive Care unit,
On account of being vertically unfit,
Keeps fate fuming in a medical kit.
Life supporting systems can guarantee
Chances of vertical return,only fifty fifty.
From there,some are soon moved to the theater
Not for a screen show,but for a surgical barter.
Men in masks as if in helmets,ride through
The body's inner ring roads,without any rue.
Whether the theater restores the vertical rights,
Or shows the terminal for the horizontal rites,
Depends on the way, each one fairly fights.
Stretchers, iceboxes,biers or coffins celebrate
The horizontal finale of the vertical conglomerate.
It is always the fifty fifty chances that calibrate
The structures of life,between facts and fate.
                                               P.Chandrasekaran.