Saturday, July 9, 2016

சொல் தோழா! 9

சொல் தோழா!
வெற்றுக் காகிதம் விலை பேசக்கூடாதா?
கற்றவர் பயணிக்க வெறுமையே வாயிற்படி
வெறுமையின் அடித்தளமே வேதத்தின் ஆரம்பம்; .
நிறைகுடத்தை நிறைத்தல் விரயத்தின் வழியன்றோ!
கறையில்லா வெறுமை காதலுக்கு அறைகூவல் .
வளர்பிறையின் தொடக்கமும்  வெறுமையின் வேர்தானே.
பிள்ளையார் சுழிபோட வேண்டிடும்  வெற்றுத்தாள்
வெள்ளிப்பனிமலைபோல் வெளிச்சம் காட்டிடுமே.
அச்சிட்ட அகல்விளக்காய் வெற்றுத்தாள் பவனிவர,
அகிலமெல்லாம் அதனுள்ளே அடக்குதல் காண்.
வெற்றிடத்தில் குடியேறி வினைகளின் வளமேற்ற,
குற்றமிலா மனதோடு குறிசொல்வோம் வா தோழா.
வெறுமையே வாழ்வென்னும் வாய்மைக்குப் பதிலாய்,
பொறுமையாய் புதுவழி வெறுமைக்குள் வரைந்திடுவோம்..
கரம்கோர்த்து களம் காண்போம் தோழா!
                                                               ப.சந்திரசேகரன்.            
             

No comments:

Post a Comment