Thursday, July 7, 2016

சொல் தோழா . 8

சொல் தோழா .
வங்கிகள் நாட்டின் வளங்காக்கும் வேலிகள்
வேலிகள் ஆகுமோ ஹவாலா காலிகள்;
பொதுவுடைமைக்கு  மறுபெயர் களவாடலோ ?
கணினி வந்தவுடன் கனவுகள் பெருகிட
கண்ணுக்குப் புலப்படா களவுபல கனிந்திடக்காண்..
காதும் காதும் வைத்ததுபோல் கணக்குகள் கைமாறி
கணக்குகளின் எண்மாறி, கரையேறுமோ.
இங்கே மின் திருட்டு, மின்சாரப் பொருள் திருட்டு
பொன்திருட்டு, பொன் அணியும் பெண் திருட்டு,
பன்முனைத் திருட்டே பகலும் இரவுமாக
பெருகிடும் திருட்டுக்கு போலீஸ்தான் என்செய்யும்!
திருந்தும் திருடரே திருட்டை ஒழிப்பர் என்னும்
பெருந்தகை பாடலை  போற்றிப் பாடலாம் வா தோழா
                                                        ப. சந்திரசேகரன் .     

No comments:

Post a Comment