Saturday, July 2, 2016

சொல் தோழா ! 6

சொல் தோழா !
செய்தித் தாள்களில் தலைப்புகளைப் பார்க்கும்போது
படிக்கத் தோன்றுகிறதா? மனம் பதைக்கவில்லையா?
நற்செய்திகளைத் தேடி நாடிநரம்புகள் தளரவில்லையா?
சன்னமாகச் செய்தித் தாள்கள் இருந்தபோது ,
சத்திய நூலால் சமூகம் பின்னப்பட்டிருந்தது. .
அன்று விளம்பரங்கள் செய்தித் தாள்களை ஆக்ரமித்து
தடித்ததோர் வணிகமாய், செய்திகள் உலாவரவில்லை.
நற்செய்திகள் நலிந்தது, நன்மைக்கு வறுமையோ?
பக்கங்களை புரட்டினால் பழிபாவக் கணக்குகளே.
சமூகத்தில் கருப்பின் சாயம், குற்றங்களின் குறிப்புகளே.
கூசாத உணர்வின்றி கொடூரக் கொலைகள்!
காதலும் அவற்றுக்கு காரணமாகிட, காதலே தலைகுனிகிறது.
செய்தித் தாள்களின் கறுப்புப் பதிவுகள் கழியுமோ?
களவும் கொலையும் கணிசமாய்க் குறைந்து
செய்திகள் சுவைப்பதென்றோ, சொல் தோழா.
                                                                   ப. சந்திரசேகரன் .         

No comments:

Post a Comment