மாயா.
'செல்வாக்கு' என்பது செல்வத்தால் வருவதோ?
சொல்லெனும் சுருக்குப்பைக்குள், சொகுசாய் சேர்ப்பதோ?
நல்லெண்ணம் மலராகி நூலுக்குள் இணைவதோ?
பல்லாக்கு பலர் தூக்க பவனி வருவதோ?
எல்லார்க்கும் இனியவராய் இதமாகும் பனிக்கூழோ?
வல்லான் வகுத்த வழி வரவைக்கும் நெடுஞ்சாலையோ?
புல்லாகி பூண்டாகி புவிக்குள் புதைந்துவிடும்
நல்லார் பலர்க்கும் செல்வாக்கோர் செவிச்சுமையோ?
ப. சந்திரசேகரன்.
No comments:
Post a Comment