சொல் தோழா.
மொழிக்கென முறையாய் நாகரீகம் உண்டோ?
ஏச்சும் பேசசும் எல்லா மொழியிலும்,
மூச்சுக் காற்றினில் மூர்க்கமாய்க் கலந்து
இழிவுகள் ஏற்றி, இனம்தனை இறக்குமோ?
பழிச்சொல் மட்டுமே பதிவுகள் கூட்டுமோ?
படித்தவர்,பண்பினை பரிகாசம் செய்திட
படிப்படியாய்ச் சரியுமோ, சபைகளின் மரபு?.
எழுந்திடும் எண்ணம் எச்சிலாய்த் தெறித்திட,
விழுந்திடும் வசைமொழி வரலாறு படைக்குமோ?
மற்றவர் மனதின் மாண்புகள் மறந்திடினும்
தூற்றி அவர்மனம் தாக்கிடும் காயங்கள்,
மாற்றிடும் மருந்துக்கு, மொழியேது தோழா?
நாற்றமில்லா நல்லமொழி, நாம்காண்போம் வா.
ப. சந்திரசேகரன்.
No comments:
Post a Comment