Thursday, July 28, 2016

சொல் தோழா! . 11

சொல் தோழா!
நாம் தேடுவதிங்கே கிடைக்காது போமோ?
ஓமெனும்  மந்திரம் அல்லவே,நம்மிலக்கு
தாமெனும் தாக்கம் தம்முள் கொண்டவர்
ஊமையின் மொழியினில் ஒலிகள் இழப்பர்.
பூமியில் புதுப்புது புருவங்கள் உயர்ந்திட,
நாமெனும் சொல்லின் நாதம் பெருக்குவோம்.
சாமியைத் தொழுது, சாத்திரம் காணலும்,
தீமிதி கடந்து, தூய்மைகள் உணர்த்தலும்,
கோமியம் தெளித்து கொடுந்தீட் டகற்றலும்,
சேமித்த மரபின் சிறுபயிர்க ளாயிடினும்,
பூமியும் சாமியும் ஒன்றெனக் காணலே,
நாமெனும் நாற்றின் நெடுவய லென்னும்,
பாமரன் போற்றும் பொதுவழிச் செல்வோம்.

                                                    பசந்திரசேகரன்.
   

Saturday, July 23, 2016

மாயா. 4

மாயா.
வாழ்வெனும் வலையில் வல்லினம் எதுவோ?
தாழும் உயிரினம் தரமற்ற தாகுமோ?
பாழும் பசியிலும் பற்றிடும்  வெறியிலும்,
வேழமாய், எறும்பும், வரிசையில் வலம் வர,
ஆழம் தொட்ட ஆலமாய் அறிவியல்,
சூழும் போட்டியில் சூரைக் காற்றென,    
நாடக மேடையை நாடு கடத்தி,
வேடம் தரித்த வெள்ளித் திரையின்,  
கூடுகள் கலைத்தது கொடுந் தொலைக்காட்சி.
வீடுகள் அரங்காய் இணைய வலைக்குள்
தேடுதல் வேட்டையில் திரைப்படம் திருடிட,
மூடுதல் முட்டிய  அரங்குகள் பலவாம்.
ஒன்றை ஒன்று விழுங்கிடும் வலையில்
வென்று நிலைப்பது மனமோ மாயையோ?
                                        பசந்திரசேகரன்.  


   

Thursday, July 21, 2016

சொல் தோழா.10



சொல் தோழா.
மொழிக்கென முறையாய்  நாகரீகம் உண்டோ?
ஏச்சும் பேசசும் எல்லா மொழியிலும்,
மூச்சுக் காற்றினில் மூர்க்கமாய்க்  கலந்து  
இழிவுகள் ஏற்றி,  இனம்தனை இறக்குமோ?
பழிச்சொல் மட்டுமே பதிவுகள் கூட்டுமோ?
படித்தவர்,பண்பினை பரிகாசம் செய்திட
படிப்படியாய்ச் சரியுமோ, சபைகளின் மரபு?.
எழுந்திடும் எண்ணம் எச்சிலாய்த்  தெறித்திட,
விழுந்திடும் வசைமொழி வரலாறு படைக்குமோ?
மற்றவர் மனதின் மாண்புகள் மறந்திடினும்
தூற்றி அவர்மனம் தாக்கிடும் காயங்கள்,
மாற்றிடும் மருந்துக்கு, மொழியேது தோழா?
நாற்றமில்லா நல்லமொழி, நாம்காண்போம் வா.
                                                          ப. சந்திரசேகரன். 

Blending Theories.

    Blending Theories.
    ==============
    The aroma of life is attitudinal.
    For some the crowd tastes like toffees.
    For many society is a strip of pills.
    To talk or to listen is a ticklish agenda.
    Introduction needs no loudspeakers.
    Interactions have no room for interruptions.
    When views are free from vagaries,
    Valued companionship strips its masks.
    Coming face to face, is coming together.
    Getting to know each other in x ray form,
    Reads the actual note of association.
    It is the fitness of things that emanates
    As the fine fragrance of friendship.
    The sweetness of mixing, steals the show.
                                                           PChandrasekaran.

Wednesday, July 20, 2016

மாயா.3



மாயா.
'செல்வாக்கு' என்பது செல்வத்தால் வருவதோ?
சொல்லெனும் சுருக்குப்பைக்குள், சொகுசாய் சேர்ப்பதோ?
நல்லெண்ணம் மலராகி நூலுக்குள் இணைவதோ?
பல்லாக்கு பலர் தூக்க பவனி வருவதோ?
எல்லார்க்கும் இனியவராய் இதமாகும் பனிக்கூழோ?
வல்லான் வகுத்த வழி வரவைக்கும் நெடுஞ்சாலையோ?
புல்லாகி பூண்டாகி புவிக்குள் புதைந்துவிடும்
நல்லார் பலர்க்கும் செல்வாக்கோர் செவிச்சுமையோ?
                                                              ப. சந்திரசேகரன்.    

Thursday, July 14, 2016

Help! Help!.

 "Help! Help!."
=========
 "Help! help!" is a yelp.
 At times more a whelp.
 We see the need for help
 But resist to move a step.
 We hear genuine cries in danger
 Oh! we shiver to save a stranger.
 Help is often a hook for the helper
 Bouncing back as issues improper.
 Witnesses of crimes are wary to vouch
 Lest they should shed sleep on their couch.
 When helpers become victims of rescue,
 Cries for help turn to spectacles for a view.
 God can not be present at every helpless spot.
 Hence boost the helpers to help and stem the rot.
                                                        P.Chandrasekaran.
  

Tuesday, July 12, 2016

மாயா . 2

மாயா .
புழுக்கம் நெஞ்சிலும், புழுதி புறத்திலும்,
இழப்புகள் தாங்கி இதயம் நொறுங்கிட,
வழக்குகள் தொடுத்திட, எதிரணி யாரோ ?
வீழ்த்திடும் விதியதன் தொடர்பெண் ஏதோ?
உள்குத்தே வேரூன்றி உறவுகள் ஊனமுற,
முள்ஏதோ மலர்ஏதோ! தள்ளவோ தொடவோ!
கிள்ளி எறிந்தாலும் கிளர்ச்சிகள் பலகோடி
துள்ளித் துரத்திடுமே மனதிற்குள் மாயையாய்  .  
                                                              ப. சந்திரசேகரன் .    

Saturday, July 9, 2016

சொல் தோழா! 9

சொல் தோழா!
வெற்றுக் காகிதம் விலை பேசக்கூடாதா?
கற்றவர் பயணிக்க வெறுமையே வாயிற்படி
வெறுமையின் அடித்தளமே வேதத்தின் ஆரம்பம்; .
நிறைகுடத்தை நிறைத்தல் விரயத்தின் வழியன்றோ!
கறையில்லா வெறுமை காதலுக்கு அறைகூவல் .
வளர்பிறையின் தொடக்கமும்  வெறுமையின் வேர்தானே.
பிள்ளையார் சுழிபோட வேண்டிடும்  வெற்றுத்தாள்
வெள்ளிப்பனிமலைபோல் வெளிச்சம் காட்டிடுமே.
அச்சிட்ட அகல்விளக்காய் வெற்றுத்தாள் பவனிவர,
அகிலமெல்லாம் அதனுள்ளே அடக்குதல் காண்.
வெற்றிடத்தில் குடியேறி வினைகளின் வளமேற்ற,
குற்றமிலா மனதோடு குறிசொல்வோம் வா தோழா.
வெறுமையே வாழ்வென்னும் வாய்மைக்குப் பதிலாய்,
பொறுமையாய் புதுவழி வெறுமைக்குள் வரைந்திடுவோம்..
கரம்கோர்த்து களம் காண்போம் தோழா!
                                                               ப.சந்திரசேகரன்.            
             

Thursday, July 7, 2016

சொல் தோழா . 8

சொல் தோழா .
வங்கிகள் நாட்டின் வளங்காக்கும் வேலிகள்
வேலிகள் ஆகுமோ ஹவாலா காலிகள்;
பொதுவுடைமைக்கு  மறுபெயர் களவாடலோ ?
கணினி வந்தவுடன் கனவுகள் பெருகிட
கண்ணுக்குப் புலப்படா களவுபல கனிந்திடக்காண்..
காதும் காதும் வைத்ததுபோல் கணக்குகள் கைமாறி
கணக்குகளின் எண்மாறி, கரையேறுமோ.
இங்கே மின் திருட்டு, மின்சாரப் பொருள் திருட்டு
பொன்திருட்டு, பொன் அணியும் பெண் திருட்டு,
பன்முனைத் திருட்டே பகலும் இரவுமாக
பெருகிடும் திருட்டுக்கு போலீஸ்தான் என்செய்யும்!
திருந்தும் திருடரே திருட்டை ஒழிப்பர் என்னும்
பெருந்தகை பாடலை  போற்றிப் பாடலாம் வா தோழா
                                                        ப. சந்திரசேகரன் .     

மாயா. 1



மாயா
பெண்பார்ப்பரோ பெண்மை பழிப்பரோ பின்நடந்து  
கண்பார்க்கும் காளையர்க்கு காணும் வழிஎதுவோ
மண்பாண்டம் காப்பது போல் மகளிரைக் காத்திடின்
பண்பாடு புதையுமோ படியாது, அறிவின் ஆணைக்கு.
                                                                         ப. சந்திரசேகரன் .   

Tuesday, July 5, 2016

சொல் தோழா ! 7


சொல் தோழா !
அன்றய நம்வாழ்க்கைச் சூழலை
இன்றைக்கு பேசினால் பலனுண்டோ ?
நீயும் நானும் அசைபோட மற்றவர் நேரமோ ?
சட்டைப் பைநிறைய பத்துபைசா நிலக்கடலையுடன்
சிட்டுக் குருவிகளாய்ப் பறந்து விரிந்தோமே,
பொய்க்காற்று ஒருபோதும் பூங்காவில் பெற்றோமா?
எளிமையில் ஏற்றம் கண்ட இவையனைத்தும்,
நீயும் நானும் பகிர்ந்து கொள்ளும் பழைய பெருங்காயமே;
ஆனால் இன்றய காட்சிகள் நம்நெஞ்சில் பெரும் காயங்களாய்,
பதியமிட்டு பவனி வர, பார்வையே நாம்செய்த பாவமோ சொல் .
நம் மூச்சுக்  காற்றின் மிச்ச நாட்களே நமக்குச் சொந்தம்.
எஞ்சிய காற்றை இறுக்கிப் பற்றுவது இன்னும் எத்தனைக் காலமோ?
நஞ்சின் உருவங்களாய் பிஞ்சுக் குழந்தையையும் விட்டு வைக்கா
வஞ்சகரைக் கண்டு வானமே வாடி, சுருங்கிச் சரிய, .
கண்டைனர் லாரிகளைக் கண்டும், அவைபற்றி கேட்டும்
கரன்சி கணக்குகளைப் போட்டு போட்டு களைத்து,
காலத்தின் கயமைச் சாலையில், திசைமறந்து,
கால்கடுக்க பலர்நிற்க, கால்களின் பலமிழந்த நமக்கு,
காற்றைத் துறந்து காட்டுக்கு விரைந்து செல்ல,
அவசரமாய்  அமரர் ஊர்தி அழைப்பாய் தோழா.  
                                                                                ப. சந்திரசேகரன் .  
     

Saturday, July 2, 2016

சொல் தோழா ! 6

சொல் தோழா !
செய்தித் தாள்களில் தலைப்புகளைப் பார்க்கும்போது
படிக்கத் தோன்றுகிறதா? மனம் பதைக்கவில்லையா?
நற்செய்திகளைத் தேடி நாடிநரம்புகள் தளரவில்லையா?
சன்னமாகச் செய்தித் தாள்கள் இருந்தபோது ,
சத்திய நூலால் சமூகம் பின்னப்பட்டிருந்தது. .
அன்று விளம்பரங்கள் செய்தித் தாள்களை ஆக்ரமித்து
தடித்ததோர் வணிகமாய், செய்திகள் உலாவரவில்லை.
நற்செய்திகள் நலிந்தது, நன்மைக்கு வறுமையோ?
பக்கங்களை புரட்டினால் பழிபாவக் கணக்குகளே.
சமூகத்தில் கருப்பின் சாயம், குற்றங்களின் குறிப்புகளே.
கூசாத உணர்வின்றி கொடூரக் கொலைகள்!
காதலும் அவற்றுக்கு காரணமாகிட, காதலே தலைகுனிகிறது.
செய்தித் தாள்களின் கறுப்புப் பதிவுகள் கழியுமோ?
களவும் கொலையும் கணிசமாய்க் குறைந்து
செய்திகள் சுவைப்பதென்றோ, சொல் தோழா.
                                                                   ப. சந்திரசேகரன் .