காசு வாங்கி ஓட்டுப்போட்டா தப்பே இல்ல;
கூசுறதே தூசியின்னா தப்பே இல்ல.
பாத்து பாத்து ரெய்டுபோனா தப்பே இல்ல;
சேத்துவச்ச காசு ஏதும் தப்பே இல்ல.
மாறி மாறி அணியமைச்சா தப்பே இல்ல;
சேறுவாரி எறச்சதெல்லாம் தப்பே இல்ல.
நிறுவனங்கள் நெலகொலஞ்சா தப்பே இல்ல; மறுமணங்கள் பெருகிப்போனா தப்பே இல்ல.
சாதியெல்லாம் சறுக்குவதில் தப்பே இல்ல;
நீதிகூட நொறுங்கினாலும் தப்பே இல்ல.
வாடிக்கையா கெட்டப் பேச்சு தப்பே இல்ல;
மேடையேறி மொழியக் கொன்னா தப்பே இல்ல.
வாக்குறுதி அள்ளிவிட்டா தப்பே இல்ல;
பாக்குறது பணம் மட்டும்னா தப்பே இல்ல.
ஆலமரம் அடிசரிஞ்சா தப்பே இல்ல;
காலம் மாறி போச்சு ஏதும் தப்பே இல்ல.
செத்தவங்கள இழிவுசெஞ்சா தப்பே இல்ல;
மொத்தமாகக் குணம்செத்தா தப்பே இல்ல.
நல்லவழி காட்ட இங்கே யாரும் இல்ல;
எல்லாவழியும் பொல்லாவழி தப்பே இல்ல.
ப.சந்திரசேகரன் .
கூசுறதே தூசியின்னா தப்பே இல்ல.
பாத்து பாத்து ரெய்டுபோனா தப்பே இல்ல;
சேத்துவச்ச காசு ஏதும் தப்பே இல்ல.
மாறி மாறி அணியமைச்சா தப்பே இல்ல;
சேறுவாரி எறச்சதெல்லாம் தப்பே இல்ல.
நிறுவனங்கள் நெலகொலஞ்சா தப்பே இல்ல; மறுமணங்கள் பெருகிப்போனா தப்பே இல்ல.
சாதியெல்லாம் சறுக்குவதில் தப்பே இல்ல;
நீதிகூட நொறுங்கினாலும் தப்பே இல்ல.
வாடிக்கையா கெட்டப் பேச்சு தப்பே இல்ல;
மேடையேறி மொழியக் கொன்னா தப்பே இல்ல.
வாக்குறுதி அள்ளிவிட்டா தப்பே இல்ல;
பாக்குறது பணம் மட்டும்னா தப்பே இல்ல.
ஆலமரம் அடிசரிஞ்சா தப்பே இல்ல;
காலம் மாறி போச்சு ஏதும் தப்பே இல்ல.
செத்தவங்கள இழிவுசெஞ்சா தப்பே இல்ல;
மொத்தமாகக் குணம்செத்தா தப்பே இல்ல.
நல்லவழி காட்ட இங்கே யாரும் இல்ல;
எல்லாவழியும் பொல்லாவழி தப்பே இல்ல.
ப.சந்திரசேகரன் .
fine sir
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete