கருவறையின் திமிறல்கள் தாய்மைக்குக் கொண்டாட்டம்;
குழந்தையின் திமிறல்கள் குடும்பத்தின் கொண்டாட்டம்;
இளமையின் திமிறல்கள் இணைபவர்க்குக் கொண்டாட்டம்;
இல்லறத்தின் திமிறல்கள் அகமகிழும் கொண்டாட்டம்.
சுமையேற்கும் திமிறல்கள் சுகம்காணும் மரபாகி
வாழும்நாள் ஒவ்வொன்றும் வகைவகையாய்த் திமிறிடுமாம்!
வயதோடு வம்பிழுத்துத் திமிறலெல்லாம் திணறி
தரைதொடும் வானமென நிலம்சாய்ந்துத் திமிறிடுமாம் !
நிமிர்ந்துநின்ற நடுமுதுகை நிமிடங்கள் கேலிசெய்ய
அமிழ்ந்திடும் வேளையிலும் அரைநாழிகைத் திமிறிடுமாம்!
பாதங்களின் புரட்சியெலாம் பாதிவழி தடம்புரள,
மீதிவழித் திமிறல்கள் மறுதலையின் கொண்டாட்டம்.
தவணையிலே திமிறல்கள் தலைக்கேறி குடைசாய,
எமனோடும் திமிறுகையில்,சிதையிழக்கும் கொண்டாட்டம்.
ப.சந்திரசேகரன் .

No comments:
Post a Comment