Tuesday, October 30, 2018

நட்டக்கல்லும் பேசும் 'ஓம்'


                      I

உள்ளிருக்கும் நாதனின் 
ஓமெனும் பரம்பொருள்,  
கல்லுக்குள் ஒளியாகி, 
நாளுமேற்றும் புஷ்பத்தை 
நாடிவந்துச் சூடிட 
சுற்றிவந்து மொணமொணன்று, 
சொல்லிடும் மந்திரத்தை  
மனமுவந்து கேட்டிட, 
வல்லமை வேரூன்றி,
சக்தியுடன் இணைந்ததோர்,
ட்டக்கல்லும்  பேசும் 'ஓம்',
நான்குஎல்லைக்  காவலாம். 
                      II
ஊனுக்குள் ஒளிந்திருப்போன்
உணர்வுகளின் உயிராகி,  
கருப்பாகி சிகப்பாகி 
தேனுக்குள் இனிப்பாகி,  
தெவிட்டாது தொழுவோரின்  
ஊனிலும்,வானிலும்,
வாயில் காப்போனாய்,
மறுப்பவர் நகைத்திடினும் 
'மதியிலீர்' போற்றிடும், 
மகிமை படைத்திடும்,
மாண்புடை இறைவனாம்! 
ப.சந்திரசேகரன் .      

No comments:

Post a Comment