Tuesday, October 16, 2018

அறிவுத்தேடலில் ஆலயங்கள்.

     'ஆலய தரிசனம் கோடி புண்ணியம்''கோவில் இல்லா ஊரில் குடியிருக்க லாமோ,'போன்ற பழமொழிகளுக்குப் பஞ்சமில்லா மண்ணில், கோவில்கள்,ற்றும் அங்கே குடியிருக்கும் கடவுள்கள் பற்றிய கேள்விகளுக்கும்,சர்ச்சைகளுக்கும், ஐயப்பாடுகளுக்கும்,பஞ்சமில்லை.அறிவுசார்ந்த மனிதர் தமக்கு,அறிவுக்கு ஏற்புடைய விடைகளைக் காண விழையும், வினாக்களை எழுப்பும் தார்மீக உரிமையுண்டு. 
    பெரும்பாலும்,இந்துமதம் சார்ந்த ஆலயங்களைத் தொடர்புபடுத்தியே கேள்விகளும்,சர்ச்சைகளும், நிறைய எழுகின்றன.இதர மதங்களிலும் உள்ளுக் குள்ளே அரசல் புரசலாக மாறுபட்ட விமர்சனங்கள் இருக்கக்கூடும்.ஆனால் அவைகள் பொதுவாக  வெளியே வருவதில்லை.நான் இறைநெறி போற்று பவனாக இருப்பினும்,மதவாதி ல்ல;நாத்திகர் களை வெறுப்பவனும் ல்ல.இருப்பினும்,இந்து ஆலயங்கள் தொடர்பாக, இறைவழிபாடு செய்வோர் சிலரும்,நாத்திகர்கள் பலரும் எழுப்பும் அறிவுசார்ந்த கேள்விகளுக்கு,இவைகள் விடையாகக் கூடுமோ என்று நினைத்து,இங்கே சில கருத்துக்களைப் பதிவுசெய்கிறேன். 
    இறைவன் மொழிப்பாகுபாடுகளைக் ந்தவன் என்கிற நிலையில்,வேத அதிர்வுகளுக்கும்,தேவார, திருவாசக,திவ்யப்பிரபந்த வரிகளுக்கும் இடையேபிரார்த்தனை வழிபாட்டு முறைகளில்,இறைவனை நெருங்குவதில் நிச்சயமாக வேகத் தடைகள் இருக்க வாய்ப்பில்லை.இறைவன் சாதிகளுக்கு அப்பாற்பட்ட வனாகவே இருக்கவேண்டும்;அவ்வாறு இல்லை யெனில்,அவன் இறைவனே இல்லை.
   எனவே,நேர்மையான நெஞ்சத்தோடும்,உண்மை யான இறையன்போடும்,யார் இறைவனின் மூல அமர்வுப்பகுதியை நெருங்கி,பிரார்த்தனை செய்தா லும்,அதனை  இறைவன் ஏற்றுக்கொள்வான் என்பதற்கு,திருக் கண்ணப்பநாயனாரும்,இறை வனைத் தன்னருகே எழுந்தருளச்செய்த நந்தனாரும்,  எடுத்துக்காட்டாவர். 
    அர்ச்சகர்களின் தேர்வுபற்றியும்,வழிபாட்டு முறைகள் பற்றியும் பல்வேறு விதமான கருத்துக் களும், முரண்பட்ட நிலைளும்,செய்திகளும், வழக்குகளும்,தீர்ப்புகளும், நடைமுறை மாற்றங் களும்,மாறிவரும் தலை முறைக்கு ஏற்றவாறு, வலம்வந்து கொண்டிருக்கின்றன.இவற்றை யெல்லாம் கடந்து இறையன்பர்களாலும் நாத்திக நண்பர்களாலும் எழுப்பப்படும் ஒரு முதன்மையான கேள்வி,ஆலயங்களுக்கு வரும் பக்தர்களின்   எண்ணிக்கை குறித்ததாகும்.இந்த கேள்வி பின்வரு மாறு வகைப்படுத்தப்படலாம்.
    எத்தனையோ பெருமாள் கோவில்களும், மாரியம்மன் ஆலயங்களும்,முருகன் வழிபாட்டுத் தங்களும்,புராதன ஆலயங்களும் நிறைந்திருக் கும் பாரத தேசத்தில்,குறிப்பிட்ட சில இந்து ஆலயங்களில் மட்டும் அன்றாடம் மக்கள் திரளாக மூச்சுமுட்டும் அளவிற்குக் கூடுவதேன்?ஊருக்கு ஊர் அம்மன் ஆலயங்கள் கொண்ட தமிழகத்தில் சமயபுரத்திற்குச் செல்லும் பக்தர்கள் கூட்டம் ஏன் அந்த அளவிற்கு புன்னைநல்லூருக்கோ வேறு மாரியம்மன் கோவில்களுக்கோ செல்வதில்லை? குன்றிலும்,குடிலிலும்,கோலோச்சும் முருகனுக்கு, பழனியிலும்  திருச்செந்தூரிலும் கூடும் பக்தர்கள் பலர்,அறுபடை வீடுகளில் மற்ற நான்கினை,ஏன் முக்கிய ஒருசில தினங்களைத் தவிர இதர நாட்களில் கண்டுகொள்வதில்லை?
    பட்டிதொட்டியெல்லாம் பவனிவரும் பெருமாளுக்கு, ஏன் திருப்பதி திருமலையிலும்,ஸ்ரீரெங்கத்திலும், அத்தனை செல்வாக்கு?அனந்தசயனத்தில் பள்ளி கொண்ட ஸ்ரீ ரெங்கநாதருக்கும் ஆர்ப்பரிக்க நிற்கும்  ஸ்ரீ வாரு வெங்கடாசலபதிக்கும் மட்டும் எங்கிருந்து வந்தது அன்றாடம் பல்லாயிரக் கணக்கான பக்தர் களுக்கு அயராது தரிசனம் தரும் மகிமை?இந்த நிலைப்பாடு பக்தர்கள் இறைவன்மீது காட்டும் ஒரவஞ்சனையா?அல்லது குறிப்பிட்ட இந்த ஆலயங்கள் தவிர மற்ற வற்றில் வீற்றிருக்கும் இறைவனின் மகிமைக் குறைவா? இந்த நெருடலான கேள்விகளுக்கு அனுபவபூர்வமான ஆன்மீகவாதி களின் பதில்  பலவாக இருக்கக்கூடும்.
    என்னைப் பொறுத்தவரை இந்த கேள்விகளுக்கு, ஒரு வித்யாசமான உவமையைச் சுட்டிக்காட்டி {வாதத்திற்காக மட்டுமே}விளக்கம் காணலாமோ எனத்தோன்றுகிறது. ஆலயமிங்கே ஆயிரமுண்டு  அரசியல் கட்சிகள் போல;எப்படி எல்லா அரசியல் தலைவர்களுக்கும் ஒரே மாதிரியான செல்வாக்கு கிட்டுவதில்லையோ,அதைப்போன்றே எத்தனையோ ஆலயங்களிருந்தும்,ஒருசில மட்டுமே பக்தர்களின் நம்பிக்கையை வெளிக்காட்டும் திருத்தலங்களாக அமைகின்றன. ஒரு நல்ல தலைவன் இல்லையேல் மக்களுக்கு நல்வாழ்வு இல்லை.மக்கள் செல்வாக்கு இல்லாதவன் தலைவனே இல்லை. 
   குறிப்பிட்ட சில ஆலயங்களில் வடிவமைக்கப்பட்ட சிலைகளில்,மின்காந்த சக்தியைப்போன்று ஏதோ ஒன்று  மக்களை வெகுவாகக் கவர்ந்திழுத்து அவர்களின் மனதில் பரவசத்தையும் இனம்புரியா மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவது,பக்தர்களின் எண்ணிக்கை அபரிமிதமாகக் கூடுவதற்கு காரண மாகலாம்.
  சமயபுர மாரியம்மனும்,பழனி ராஜ அலங்காரத்தில் முருகனும், திருப்பதி ஏழுமலையானும் சிலைவடி வத்தில் நம் கண்களைக் களவாடி, சிரசேறி,சில நொடிகள் சிந்தையில் பரவசம் தோற்றுவிப்பதாக எண்ணி எத்தனை கோடி பக்தர்களின் மனம்,வழி பாட்டுக் கடலில் கரைந்திருக்குமோ தெரியாது .
    மனிதன் மீது மனிதன் கொள்ளும் நம்பிக்கை அன்பாக, ஆதரவாக, ஆன்ம நிறைவாக, அமைகிறது. அதுபோலவே, இறைவன் மீது மனிதன் கொள்ளும் நம்பிக்கை, அடர்ந்து பக்தியாகி, ஆன்மபலம் பெருகி, அந்த ஆன்ம பலத்தில்  நல்லெண்ணமும்,நன்னடத் தையும், நேர்மையும் உள்ளடக்கி,பிரார்த்தனை  களாக,இறைவவனைச் சென்றடைகிறது. 
     திரளாக மக்கள் கூடும் ஆலயங்களில், பிரார்த் தனை அணுக்களாகி வீரியம் பெற்று,வணங்கும் தெய்வத்திற்கு விஸ்வரூபத்தை அளிக்கிறது.காலம் காலமாக எண்ணங்களால்,செயல்களால் உயர்ந்த வர்கள்,புண்ணிய சக்தியாகி ஒருசில ஆலயங்களில் அதிக எண்ணிக்கையில் காலெடுத்துவைக்க,ந்த  புண்ணியத்தளங்களின் பெருமையும்,மகிமையும் பிரகாசித்து,அப்பிரகாசத்தை அங்கிருக்கும் மூலக் கடவுளுக்கு சமர்ப்பிக்கிறது .
     இயற்கையையும் மனிதனையும் இறைவன் படைத்தான் என நம்புபவர்கள்,மனிதனே இறைவ னுக்கு விளக்கானான் என்பதையும்,மனிதனின் அன்பும் நம்பிக்கையும் இறைவனின் றுஉருவா னது என்பதையும்,ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.      மனிதன் மனிதனை நம்பினால் மனிதம் தழைக் கிறது.மனிதன் இறைவனை நம்பினால் மனிதனுள்  ஆன்மீகம் தழைக்கிறது.நல்லெண்ணமும் நற்செயல் களும் நலிந்து போயிடின்,இம் மண்ணில் மனிதமும் இல்லை;இறைவனும் இல்லை.
   நெஞ்சில் அன்பைத் தாங்கி அயராது விடும்,  குழந்தை மனம்கொண்டோரின்  மூச்சுக்காற்றில் கூஇறைவன் நிறைந்திருப்பான்.இக்காற்றழுத்தம் அதிகமாகக் காணப்படும் ஆலயங்களில்,இறைவன் சர்வவல்லமையோடு சங்கமிப்பன். 
     இந்த விளக்கங்கள் என் சிந்தனையில் தோன்றிய சிறு அதிர்வுகளின் வெளிப்பாடே,இவை ஒரு சிலரின் அறிவுசார்ந்த கேள்விகளுக்கேனும் விடையாகக் கூடுமோ என்பதே, என் எதிர்பார்ப்பாகும். 
ப.சந்திரசேகரன் . 
                       ======================

5 comments:

  1.  சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, செயற்கரிய காரியங்களை செய்வது சித்த மூர்த்திகளது செயலாகும்.
     சித்தர்கள் யோக சமாதி அடைந்த இடங்கள் மகிமை பெற்ற திருத்தலங்களாக விளங்குகின்றன. அந்த சன்னதியில் மனதை ஒருமுகப்படுத்தி இறைவனிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும், செய்வது வெற்றி பெறும் என்பது ஆன்மீகவாதிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை.
     அப்படிப்பட்ட சித்தர்களில் 18 பேர் தலையாய சித்தர்கள் ஆவர். அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் இன்றும் அருள் தரும் சன்னதிகளின் விவரம்
    01. திருமூலர் - சிதம்பரம்
    02. இராமதேவர் - அழகர்மலை
    03. அகஸ்தியர் - திருவனந்தபுரம்
    04. கொங்கணர் - திருப்பதி
    05. கமலமுனி - திருவாரூர்
    06. சட்டமுனி - திருவரங்கம்
    07. கரூவூரார் - கரூர்
    08. சுந்தரனார் - மதுரை
    09. வான்மீகர் - எட்டிக்குடி
    10. நந்திதேவர் - காசி
    11. பாம்பாட்டி சித்தர் - சங்கரன்கோவில்
    12. போகர் - பழனி
    13. மச்சமுனி - திருப்பரங்குன்றம்
    14. பதஞ்சலி - இராமேஸ்வரம்
    15. தன்வந்திரி - வைதீஸ்வரன்கோவில்
    16. கோரக்கர் - பொய்யூர்
    17. குதம்பை சித்தர் - மாயவரம்
    18. இடைக்காடர் – திருவண்ணாமலை
    ncbkncb@gmail.com
    DUGAR 05/107
    17/10/2018 03:08:03 AM Wednesday

    ReplyDelete
  2. I have not gone into meditation side though I knew this earlier.It is my own staunch faith that God is closer to those who are plain hearted --as plain as a new born Kid.Love conquers more than meditation.God wants nobler actions than meditation. Moreover my article was a response to some posts in the Facebook regarding over crowding in selective temples.I wanted to give a convincing response even to atheists.Thanks and regards,Mr.Balasunramonia Pillai.

    ReplyDelete
  3. எல்லாமே நம்பிக்கையில் விளைந்த கருதுகோள்கள் சார்.... திருப்பதி போனால் தான் சிறப்பான பலன் கிடைக்கும்னு நம்பி போறாக.. அது அப்படியே பரவி பெரும் கூட்டமாயிடுது.. அவ்வளவுதான்.

    ReplyDelete
  4. An old Tamil film song if translated into English would read as follows."Have faith in your heart;your life will be sweet."Hope you like the song my dear Sundaram.

    ReplyDelete