Monday, October 1, 2018

எங்கே மகாத்மா?


இங்கே இன்று  மகாத்மா இல்லை;
ஆனால் மகாத்மாவைப் பற்றி,
விதவிதமாய் விமர்சனங்கள் உண்டு.
இங்கே மகாத்மாபோல் புன்னகை உண்டு;
ஆனால் புன்னகையில் புனிதம்  இல்லை.
இங்கே மகாத்மாவின் எளிமை உண்டு;
எளிமைக்குள் ஏராளமாய் ஏய்ப்புகள் உண்டு.
இங்கே மகாத்மாவின் பணிவு உண்டு;
பணிவுக்குள் பலமாய்ப் பாசாங்கு உண்டு.

தரித்திரத்தைத் தத்தெடுத்து சட்டை களைந்து
சரித்திரம் படைத்த  மகாத்மாவின் மண்ணில்,
உரைத்திடும் சொற்களின்,பொய்யிலும் புரட்டிலும் 
சறுக்கிடும் சத்தியம் தரித்திர மாகிட,
ஆண்டுக்கு ஆண்டு ஆத்மா தொலைத்து, 
மகாத்மா பெயரில் விடுமுறை போற்றி 
மகத்துவம் அவருடன் மன்பதை புதைத்து, 
'மாண்புகள்' கண்டதே மகாத்மா தினமோ? 
மனிதம் மறந்திட,மகாத்மா எங்கோ ?
                              {மன்பதை--Society}      

ப.சந்திரசேகரன் .    

No comments:

Post a Comment