Friday, October 19, 2018

புழுக்கம் ஏனோ ?

பொரிந்து தள்ளுவர்
பேசிடும் பெண்கள்;
புரிந்து,தள்ளுவர்,
புரியாப் பலவும்.
விரிந்த மனமெனின்
அவர்க்கிணை அவரே!
விரியா அவர்மனம்,
புரிவரோ ஆண்கள்?
குடும்பத் தலைவனை
உடும்பெனப் பற்றும்,
ஆண்மகன் நாவின்
உமையவள் அவளே.
மணமுறும் முன்னே 
கூசிடும் மனமது,
மணந்தவள்  வந்திட
பேசிடக் கூடுமோ,
பெருந்தகை ஆண்மை?
பொரிந்து தள்ளிடினும்,
புரியாப் பெண்மையை,
புரிந்தவள் பெண்ணே!
பெண்ணைப் புரியா
ஆண்மகன் இங்கே,
புரிந்திடக் கூடுமோ
பொரிபவள் அழகு?
புவியதன் பூரிப்பு
பொரிதலின் புரிதலாம் ! 
புரியா ஆண்மைக்கு,
புழுக்கம் ஏனோ? 
ப.சந்திரசேகரன் .      

No comments:

Post a Comment