Sunday, August 12, 2018

சுழித்தது சுழித்தபடி

மழை மிதித்த மண்
மகிழ்ந்து மயங்கியது;
குழலூதும் இதழ்களின்
கிறக்கம் போல!
உழைத்துக் களைத்தவரே ,
உணவின் சுகமறிவர்.
இழைத்த மரமே, 
இதமாய் இடம்சேரும். 
அழைக்காமல் அரவணைக்கும்
ஆறுதல் கரங்களுக்கு,
ஆண்டவனே மூலம்!
வழிமறக்கும் வாழ்வில் 
கூட்டலும் பெருக்கலும்  
கழித்துக் கரையேற,
வேளை வரும்நேரம், 
காலில்லாக் கட்டிலாம். 
விழித்துக் காத்திருந்தாலும்
காத்திருப்பு,விடியலுக்கு
விடைகாணப் போவதில்லை. 
எழுத்தும் கணக்கும்
எங்கே பதிவாகிறதோ,
பிழைப்பின் பாதையும்
அங்கே வரைவாகிறது!
கழுத்துக்கு மேலேறும் 
கருவைமுள் செருக்கிற்கு,
பழுத்துப் பாயில்விழும் 
முதுமையே பாடம். 
செழித்து வாழ்ந்தாலும் 
சேற்றில் கரைந்தாலும்,
சுழித்தது சுழித்தபடியே! 
ப.சந்திரசேகரன் .      

No comments:

Post a Comment