நட்பு
{இனிய நண்பர்கள்தின வாழ்த்துக்கள் }
பக்கத்தில் நிற்பவர் பக்க பலமோ?
எட்டத்தில் நிற்பவர் முட்டிடும் மாடோ?
திக்குகள் மாறி தவித்திடும் வேளை,
தட்டிடத் திறந்திடும் கதவே நட்பு .
தக்கதாய் தீர்வுகள் தருவதே நீதி;
திட்டமாய் ஆற்றிடும் செயலது மீதி.
சிக்கெனைப் பற்றும் கரங்கள் மூலம்,
சிட்டிகை நன்மையே நட்பின் கோலம்
முக்காடு விலக்கி முகம்பார்க்கும் நேரம்,
முட்டாள் தனத்தின் முகப்புகள் கூறும்;
இக்கதை என்றுமே நட்பிற்கு இல்லை,
கிட்டத்தில் நட்பு கிளறிடும் தொல்லை.
விக்கலை விரட்டிட மிரட்டுதல் நட்பு;
விட்டத்தை நோக்கி நின்றிடின் வெறுப்பு.
சுக்கெனும் மருந்தாய் நோயகற்றும் நட்பு;
சுட்டாலும் வெண்மைதரும் சங்கின் சிறப்பு.
{இனிய நண்பர்கள்தின வாழ்த்துக்கள் }
பக்கத்தில் நிற்பவர் பக்க பலமோ?
எட்டத்தில் நிற்பவர் முட்டிடும் மாடோ?
திக்குகள் மாறி தவித்திடும் வேளை,
தட்டிடத் திறந்திடும் கதவே நட்பு .
தக்கதாய் தீர்வுகள் தருவதே நீதி;
திட்டமாய் ஆற்றிடும் செயலது மீதி.
சிக்கெனைப் பற்றும் கரங்கள் மூலம்,
சிட்டிகை நன்மையே நட்பின் கோலம்
முக்காடு விலக்கி முகம்பார்க்கும் நேரம்,
முட்டாள் தனத்தின் முகப்புகள் கூறும்;
இக்கதை என்றுமே நட்பிற்கு இல்லை,
கிட்டத்தில் நட்பு கிளறிடும் தொல்லை.
விக்கலை விரட்டிட மிரட்டுதல் நட்பு;
விட்டத்தை நோக்கி நின்றிடின் வெறுப்பு.
சுக்கெனும் மருந்தாய் நோயகற்றும் நட்பு;
சுட்டாலும் வெண்மைதரும் சங்கின் சிறப்பு.
Happy Friendship day
ReplyDelete