அணிலுக்கு தேவையோ ஆலமர நிழல்?
எறும்பை மிதித்தல் யானைக்கு பலமோ?
இராப்பிச்சை காரருக்கு பகலில் நோன்போ?
பகல்கன வென்பது பொய்யென் றாகிடின்
இரவின் கனவுகள் நிகழ்ச்சியின் நிரலோ?
குருட்டு அதிஷ்டத்தின் தேர்வுகள் சரியோ?
மரியாதை நிமித்தம் சந்திப்பு நடத்துவோர்
சரியான மரியாதை பாடம் படிப்பரோ ?
பூசலைப் பிளவென கருதிடும் வேளையில்
பூசுதல் பிளவை போக்கிடும் செயலோ ?
பருக்கை சோற்றிற்கும் உலையே பொறுப்பெனில்
ஊருக்கே உலைவைத்தல்,பழியென் றாகுமோ ?
அறங்கூறும் சொற்கள் முரண்பாடுக ளாகிட
புறங்கூறும் பேச்சுகள் பிரளுவது தவறோ ?
ப.சந்திரசேகரன் .
எறும்பை மிதித்தல் யானைக்கு பலமோ?
இராப்பிச்சை காரருக்கு பகலில் நோன்போ?
பகல்கன வென்பது பொய்யென் றாகிடின்
இரவின் கனவுகள் நிகழ்ச்சியின் நிரலோ?
குருட்டு அதிஷ்டத்தின் தேர்வுகள் சரியோ?
மரியாதை நிமித்தம் சந்திப்பு நடத்துவோர்
சரியான மரியாதை பாடம் படிப்பரோ ?
பூசலைப் பிளவென கருதிடும் வேளையில்
பூசுதல் பிளவை போக்கிடும் செயலோ ?
பருக்கை சோற்றிற்கும் உலையே பொறுப்பெனில்
ஊருக்கே உலைவைத்தல்,பழியென் றாகுமோ ?
அறங்கூறும் சொற்கள் முரண்பாடுக ளாகிட
புறங்கூறும் பேச்சுகள் பிரளுவது தவறோ ?
ப.சந்திரசேகரன் .
No comments:
Post a Comment