Wednesday, August 1, 2018

கடிவாளம்

பெண்பார்க்கப் போனவனை 
பேய்ப்பிடிக்கப் போக, 
பேய்ப்பிடித்த காரணத்தால் 
பெண் பிடித்துப் போனதாம்! 
பெண்பிடித்த மாப்பிள்ளை 
மணமுடிக்கப் போக, 
ம் முடித்த அவனுக்கு 
மதம் பிடித்ததாம்! 
மலைப்பாம்பின் தலையில் 
எலியேறிய கதையாய், 
தலையேறிய பேயது 
தாண்டவங்கள் புரிய, 
மனையாளின் மண்டைக்குள், 
மதகுடைந்த குடைச்சலாம். 
லைபாயும் அவன்மனதை 
ஆள்காட்டி விரல்கொண்டே 
அவள் அறியும் நேரம், 
தறிகெட்ட  பேய்,
தலைதெறிக்க ஓடியதாம். 
தானெனும் பேய் 
தலைக்கேறிய கணவனை, 
நாணலாய் வளைத்திழுக்கும் 
நடுமுதுகே பெண்மை! 

ப.சந்திரசேகரன் .      

No comments:

Post a Comment