Monday, August 27, 2018

Two Leading Lights of similar mettle.

{1924-2018}

                                                                   {1924-2018}

Between Gwalior and Thirukkuvalai,
One is called a proud princely state; 
The other is viewed as a pauper's mate.
Their distance is plainly polar made.
But two men,though being poles apart,
Boldly Broke the norms of the poles,
And broke their conflicting distance,
By their dear,delightful frames of mind.

Poetry is not just fancy or imagination;
It is a state of immigration of the self, 
Into the sea of humanity and its waves.
These two men did the immigration,
By delving deep into the troubled waters.
Be it the Ariya Samaj or the Dravidian Fort,
The ideology that transpired was more real
Than the location from where it transpired.

Same year born A.B.V and M.K,were poets first.
It was poetry that made them sail and speak,
With the ease of breeze and the flow of a fountain.
They called the shots, gauging the pulse of people.
Their tongues were different;so were their tasks.
But they were similar in their eloquence mode,
To break many a deadlock with a daring attitude.
To issues on hand,their minds were alertly glued.

Pokhran II and Kargil War,were Vajpayee's vivid marks;

Farmers' mart and caste free homes led kalignar's sparks.
The ten time MP and the thirteen time MLA did coyly begin
Their role at the hustings,the same year,with rhythms akin.
If the three time PM,galvanized politics with a fine passion,
The five time CM,gave it the Sun's rays,to radiate a mission.
On the alliance front,their open arms could accommodate,
Friends and rivals alike,without any preconceived template.

Both were creative heads,charming crowds to listen to them,
As their leading mettle,governed with glory,at power's helm.
P.Chandrasekaran.


Friday, August 24, 2018

முரண்பாடுகள்!

அணிலுக்கு தேவையோ ஆலமர நிழல்?
எறும்பை மிதித்தல் யானைக்கு பலமோ?
இராப்பிச்சை காரருக்கு பகலில் நோன்போ?
பகல்கன வென்பது பொய்யென் றாகிடின் 
இரவின் கனவுகள் நிகழ்ச்சியின் நிரலோ?
குருட்டு அதிஷ்டத்தின் தேர்வுகள் சரியோ?
மரியாதை நிமித்தம் சந்திப்பு நடத்துவோர்
ரியான மரியாதை பாடம் படிப்பரோ ?
பூசலைப் பிளவென கருதிடும் வேளையில் 
பூசுதல் பிளவை போக்கிடும் செயலோ ? 
பருக்கை சோற்றிற்கும் உலையே பொறுப்பெனில்  
ஊருக்கே உலைவைத்தல்,பழியென் றாகுமோ ?
அறங்கூறும் சொற்கள் முரண்பாடுக ளாகிட 
புறங்கூறும் பேச்சுகள் பிரளுவது  தவறோ ? 
ப.சந்திரசேகரன் .  

Tuesday, August 21, 2018

The Deluge and its After

A pair of hands can hold;
Pairs of hands can lift.
Lifting is a heavier task,
As heavy as the person or thing lifted.
Disaster breaks life into pieces,
Along with people's hope for revival.
Pairs of hands split into groups,
To hold the hopes of retrieval,
And lift hopes along with the victims
Of sudden dislocation of days and nights.
As hands can not lift without holding,
Hopes cannot hold without lifting.
Losses vary,between those who have lost
And those who assess the weight of losses.
The weight of hope is always less than
The weight of losses and their lasting blows.
While the weight of loss is extrinsic,
The weight of the pain of loss is intrinsic.
But seeing others suffer as flotsam and jetsam, 
Perceptions pour pain into the soul of humanity,
From those who suffer to those who see them suffer.
Being part of a deluge is almost similar to being into it.
Transfer of pain triggers relief and succour in plenty
Through millions of pairs of hands from many zones,
Shutting the flow of pain through hope raisers.
Humanity hails huge tragedies with a united 'down down'
Thereby destroying the draconian influx of deluge,
By mounting mammoth hopes one above the other
With a single mind, that stalls the surge of disasters.
P.Chandrasekaran 

Sunday, August 12, 2018

சுழித்தது சுழித்தபடி

மழை மிதித்த மண்
மகிழ்ந்து மயங்கியது;
குழலூதும் இதழ்களின்
கிறக்கம் போல!
உழைத்துக் களைத்தவரே ,
உணவின் சுகமறிவர்.
இழைத்த மரமே, 
இதமாய் இடம்சேரும். 
அழைக்காமல் அரவணைக்கும்
ஆறுதல் கரங்களுக்கு,
ஆண்டவனே மூலம்!
வழிமறக்கும் வாழ்வில் 
கூட்டலும் பெருக்கலும்  
கழித்துக் கரையேற,
வேளை வரும்நேரம், 
காலில்லாக் கட்டிலாம். 
விழித்துக் காத்திருந்தாலும்
காத்திருப்பு,விடியலுக்கு
விடைகாணப் போவதில்லை. 
எழுத்தும் கணக்கும்
எங்கே பதிவாகிறதோ,
பிழைப்பின் பாதையும்
அங்கே வரைவாகிறது!
கழுத்துக்கு மேலேறும் 
கருவைமுள் செருக்கிற்கு,
பழுத்துப் பாயில்விழும் 
முதுமையே பாடம். 
செழித்து வாழ்ந்தாலும் 
சேற்றில் கரைந்தாலும்,
சுழித்தது சுழித்தபடியே! 
ப.சந்திரசேகரன் .      

Wednesday, August 8, 2018

You Knew Captain,You Knew!


You knew where to anchor your ship
To thwart the threats of a sinking slip.
You knew how to weather the storm,
Without raising an unwanted alarm.
You knew to express your words,warm
As much to burst out those,full of storm.
You knew that the word 'we' surpassed 'I'
That kept your image ever growing high
You knew your words before your thought
And dressed them daintily to draw your slot.
You knew neatly,many a nook and corner
From where,your grit,you would garner.
You knew how to arrest and accommodate,
Your enemies'spate and your partners'fate.
You knew the status of your State and its soil
And toiled to train your steps never to spoil.
You knew you breathed your language to spill
Sense and hope,to lift the cadre's sagging will.
You knew your purpose of life was only to strive;
The struggle for your tomb,is sure to stay alive.
P. Chandrasekaran




Tuesday, August 7, 2018

கூன்விழாத் திராவிடம்

           


             கூன்விழாத் திராவிடம்.

காஞ்சித் தலைவனின் கருணைத் தம்பியே,

ஊஞ்சல் ஆடுமைய்யா உன்தமிழில் ஊரெல்லாம் !
மேலும் கீழுமாய், மலையும் மடுவுமாய்.
காலத்தின் எதிரலையில் கால்தெறிக்க நீ நடந்தும், 
நூலறுந்த பட்டமாய் நிலைகுலைந்து போகாது,
நாலும் அறிந்ததனால், ஞாலக் கருவானாய்.
'மிசா 'வெனும் பிசாசினை மிரளாது எதிர்கொண்டு 
அசையாத உறுதியுடன் ஆதிக்கவெறி சாய்த்தாய் !

புரியாத புதுத்தமிழ்,புறமொழிபோல் பரவிடினும் ,      
மரியாதை மணம்கமழும் உன்தமிழே,உன்னழகு.
சுவையுறு சொற்களால்,உன்போல் தமிழ்மாலை,
அவையின் மாண்பிற்கு, அணிவிக்க யாரிங்கே ?
மூடரின் வசைச்சொற்கள் முழுமூச்சாய் முட்டிட,
மேடையில் மேல்மூச்சு,நீ என்றும் விட்டதில்லை .
தீராத் திரவியமாய்த் தெளிந்த உன்பேச்சில்,
'பராசக்தி' புகுத்தினாள் பிரித்தாயும் பகுத்தறிவு .

பாமரனுள் பகுத்தறிவை,பதமாய்ப்  பதியமிட்டாய் . சாமியைத்  துறந்தாயோ,சாத்திரம்  திரித்தெழுந்த  
தீமைகள் துறந்தாயோ,தீதெனத் தள்ளிவைத்து !
ஊமையாய் உன் நாவில் உயர்தமிழ்  நின்றபோதும், 
சேமித்த காட்சிகளே ,செவிகளில் நிறைந்திருக்கும். 
பூமியில்நீ மறைந்தாலும்,மறையுமோ உன் தமிழ் ?
குனிவோர் பலரிங்கே ,பதவிக்கென பாசாங்கில் !
தனித்திங்கே நிற்குமே,உன்  கூன்விழாத் திராவிடம் .
                                                              ப.சந்திரசேகரன் .      

Sunday, August 5, 2018

நட்பு

                          நட்பு 
{இனிய நண்பர்கள்தின வாழ்த்துக்கள் } 

பக்கத்தில் நிற்பவர் பக்க பலமோ?
எட்டத்தில் நிற்பவர் முட்டிடும் மாடோ?
திக்குகள் மாறி தவித்திடும் வேளை,
தட்டிடத் திறந்திடும் கதவே நட்பு .

தக்கதாய் தீர்வுகள் தருவதே 
நீதி;
திட்டமாய் ஆற்றிடும் செயலது மீதி.
சிக்கெனைப் பற்றும் கரங்கள் மூலம்,
சிட்டிகை நன்மையே நட்பின் கோலம் 

முக்காடு விலக்கி முகம்பார்க்கும் நேரம், 

முட்டாள் தனத்தின் முகப்புகள் கூறும்; 
இக்கதை என்றுமே  நட்பிற்கு ல்லை, 
கிட்டத்தில் நட்பு கிளறிடும் தொல்லை. 

விக்கலை விரட்டிட  மிரட்டுதல் நட்பு; 

விட்டத்தை நோக்கி நின்றிடின் வெறுப்பு. 
சுக்கெனும் மருந்தாய் நோயகற்றும் நட்பு; 
சுட்டாலும் வெண்மைதரும் சங்கின் சிறப்பு. 

Saturday, August 4, 2018

From Behind the Kennel

Who does not bark here
At some point of time or the other?
Irritation teaches us patience.
But insinuation rouses unrest.
Too much of teasing from taskmasters,
Tacitly unleashes a canine alert,
Even on a passive,paragon of peace,
To raise an active voice of revolt.
From children to the most senile,
From a proud prince to a pitiful pauper,
Barking denotes the unbound fury.
The wagging tail of a watch dog
Would wind up its warmth,once abused.
When the lines of decorum are crossed,
Rabbits too learn,to roar like lions.
Kennels become bullying battlegrounds,
Where the load of tolerance exceeds 
The limit of the last straw of lambaste.

P.Chandrasekaran.

Wednesday, August 1, 2018

கடிவாளம்

பெண்பார்க்கப் போனவனை 
பேய்ப்பிடிக்கப் போக, 
பேய்ப்பிடித்த காரணத்தால் 
பெண் பிடித்துப் போனதாம்! 
பெண்பிடித்த மாப்பிள்ளை 
மணமுடிக்கப் போக, 
ம் முடித்த அவனுக்கு 
மதம் பிடித்ததாம்! 
மலைப்பாம்பின் தலையில் 
எலியேறிய கதையாய், 
தலையேறிய பேயது 
தாண்டவங்கள் புரிய, 
மனையாளின் மண்டைக்குள், 
மதகுடைந்த குடைச்சலாம். 
லைபாயும் அவன்மனதை 
ஆள்காட்டி விரல்கொண்டே 
அவள் அறியும் நேரம், 
தறிகெட்ட  பேய்,
தலைதெறிக்க ஓடியதாம். 
தானெனும் பேய் 
தலைக்கேறிய கணவனை, 
நாணலாய் வளைத்திழுக்கும் 
நடுமுதுகே பெண்மை! 

ப.சந்திரசேகரன் .