கண்ணிமைக்கும் நேரத்தில் கடவுளைக் காணவில்லை;
மண்மணக்கும் பூக்களிலும், மறைந்துகூட அவனில்லை;
சிலையாக நின்றவனைச் சுவடின்றி கடத்தியபின்
தலைவாழை இலைபோட்டு தற்பணமும் கொடுத்திடுவர் .
தரையில் தவிப்போரை தறுதலையாய்ப் பார்ப்போர்க்கு,
நரைமுளைத்த நமைச்சலிலே,அறப்போரும் படுகுழியே!
தெருவெல்லாம் வலம்வந்து கரம்கூப்பி கதைகேட்டு,
அரவணைக்க வழியிருந்தும்,ஆறியபுண் கீரிவிட்டு,
கருஞ்சாயம் பூசிடுவர் களங்கமிலா வெண்சுவற்றில்.
விரல்சூப்பும் குழந்தைக்கே விஷமங்கள் புரிந்திருக்கும்.
திரைமறைவில் தரையாளும், தகையிலாத் தலைகளிலே,
கறையில்லா அக்கறையில், கவனிப்போர் யாரிங்கே?
தண்ணீரும் தரந்தாழ்ந்து தாகத்தை நகைக்கையிலே,
மண்ணைவிட்டு சென்றசிவம் மீண்டிடுமோ சிலையாக?
விலைக்குறித்து விடியுமுன்னே கடல்கடந்த கடவுளுக்கு,
இலக்குடனே தலைவீழ்த்தும் தனிப்படைகள் புலப்படுமோ ?
ப.சந்திரசேகரன் .

Sivam saagathu. Anbe Sivam arrive sivam neeyum sivam naanum sivam engum sivam ethilum sivam sivane Parameswran.sivane Raman avane Krishnan.
ReplyDelete