"சித்திரமும் கைப்பழக்கம்;செந்தமிழும் நாப்பழக்கம்"
உத்திரத்தில் உறிப்பழக்கம்;ஊர்வம்பில் பொய்ப்பழக்கம்;
சத்திரத்தில் சனம்பழக்கம்;சாத்திரத்தில் குணம்பழக்கம்;
பத்திரத்தில் பணம்பழக்கம்;பாத்திரத்தில் மணம்பழக்கம் .
சித்திரையில் வெயில்பழக்கம்;சீர்செழிப்பில் சுகம்பழக்கம்;
நித்திரையில் ஒலிப்பழக்கம்;நீத்தார்க்குத் திதிப்பழக்கம்.
மித்திரத்தில் மெய்ப்பழக்கம்;மீண்டவர்க்கு பயம்பழக்கம்;
புத்திரத்தில் புதிர்ப்பழக்கம்;பூசனைக்கு துதிப்பழக்கம்.
சித்தத்தில் சிவன்பழக்கம்;செத்தபின் எமன்பழக்கம்;
கர்த்தருக்கு ஒளிப்பழக்கம்;கயவருக்கு பழிப்பழக்கம்;
புத்தருக்கு ஞானம்பழக்கம்;பூமிக்கு மானம்பழக்கம்.
வித்தகர்க்கு விடைப்பழக்கம்;வீணருக்கு சொல்பழக்கம்.
இத்தரையின் பழக்கமெலாம்,அர்த்தமுடன் அவரவர்க்கு,
முத்திரைப் பதித்திடுமோ,மூச்சுமுட்டும் பெருங்கடலில் !
ப.சந்திரசேகரன் .

Super.
ReplyDeleteSuper
ReplyDeleteThanks SRM.
ReplyDeleteகர்த்தருக்கு ஒளிப்பழக்கம்;.......kartharukku mattumthan ozhya?....kadvularkal ellorukkum than ozhi....
ReplyDelete