வருடங்கள் கூட்டிடும் வரமே வளர்ச்சி;
வளர்ந்திட மனதில் ஏற்படும் கிளர்ச்சி.
மகிழ்ச்சியில் காண்பதே முகத்தில் மலர்ச்சி;
அதிசியம் அரும்பிட,அகத்தினில் மருட்சி.
சோகம் சாய்த்திட விழிகளில் மிரட்சி;
நெஞ்சினில் கொதித்திடும் நியாயமே புரட்சி.
நிறைவுகள் இன்றிடின் மனதில் வறட்சி;
ஏற்றமும் தாழ்வும்,வாழ்வின் சுழற்சி.
தோல்விகள் தாக்கிடத் தோன்றுமே அதிர்ச்சி;
அனுபவம் வகுத்தலே,அறிவின் முதிர்ச்சி.
மறுமுனை அறிவதே,மனதின் சாட்சி;
மாற்றங்கள் மாய்த்திடும் முந்தைய காட்சி.
நடைமுறை நிரலால் நிலைப்பதே ஆட்சி;
நம்பிக்கை போற்றுதல்,நன்னெறி மாட்சி.
ப.சந்திரசேகரன் .
வளர்ந்திட மனதில் ஏற்படும் கிளர்ச்சி.
மகிழ்ச்சியில் காண்பதே முகத்தில் மலர்ச்சி;
அதிசியம் அரும்பிட,அகத்தினில் மருட்சி.
சோகம் சாய்த்திட விழிகளில் மிரட்சி;
நெஞ்சினில் கொதித்திடும் நியாயமே புரட்சி.
நிறைவுகள் இன்றிடின் மனதில் வறட்சி;
ஏற்றமும் தாழ்வும்,வாழ்வின் சுழற்சி.
தோல்விகள் தாக்கிடத் தோன்றுமே அதிர்ச்சி;
அனுபவம் வகுத்தலே,அறிவின் முதிர்ச்சி.
மறுமுனை அறிவதே,மனதின் சாட்சி;
மாற்றங்கள் மாய்த்திடும் முந்தைய காட்சி.
நடைமுறை நிரலால் நிலைப்பதே ஆட்சி;
நம்பிக்கை போற்றுதல்,நன்னெறி மாட்சி.
ப.சந்திரசேகரன் .
No comments:
Post a Comment