Wednesday, November 1, 2017

ஒரு பக்தனின் அன்பிற்கு அடிமை.

     இறைவன் சர்வவல்லமை வாய்ந்தவன்; எல்லாம் அறிந்தவன்; எங்கும் நிறைந்தவன். இருப்பினினும், ஒரு பக்தனின் அன்பினில் அவனை அடிமைப்படுத்தமுடியும் என்கிறார், தனது சொற்பொழிவில் சரளா ராஜகோபாலன்.
    புனிதன் வள்ளலாரும், இறைவனின் இப்பண்பினை வர்ணிக்கிறார் இறைவன் மலையைப்போன்றவன் என்றும், ஆனால் அவன் தன பக்தனின் கரங்களில் குடியிருக்க வருவான் என்றும் கூறுகிறார், வள்ளலார்.
    மன்னாதி மன்னனாகிய இறைவன், ஏழை பக்தனின் குடிலில் வந்தேரத் தயங்கமாட்டான். அமரத்துவம் அளிக்கின்ற அமுதத்தைப் போல், அடைவதற்கு கடினமானவன் இறைவன். ஆனாலும், பக்தனின் கரங்களில் தங்கிட., பொங்கி மகிழ்வான். ஆழ்ந்து விரிந்த கடலைபோன்றவனாகினும், பக்தனை வந்தடைவான். ஒளியேற்றும் ஞானத்தின் வடிவானவன்; ஆனாலும் பக்தி என்னும் அணுவினில்   டங்குவான்.ஒரு   உண்மையான  பக்தன்     இறைவனை  ன்  அன்பினால் கட்டிப்போடுவான்.
     வில்லிபுத்தூராரின் மகாபாரத தமிழ் வடிவத்தில், பாண்டவர்களின் தூதராகப் புறப்படுவதற்கு முன்னால், அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே அணுகி அவர்கள் கருத்துக்களை அறிய முற்படுகிறார் கிருஷ்ணபரமாத்மா.
     தர்மன் அமைதியை விரும்புவதாகக் கூறுகிறார். பீமன், அர்ஜுனன், நகுலன் மூவரும் போரை விரும்புகின்றனர். பின்னர் கிருஷ்ணன் சகாதேவனை தனியே அழைத்து, அவன் என்ன விரும்புகிறான் என்று வினவுகிறார்.அதற்கு, இறைவனின் எண்ணமே இறுதியானது என்பதை உணர்ந்த, ஞானியாகிய சகாதேவன், "நீ என்ன விரும்புகிறாயோ அதையே நானும் விரும்புகிறேன்" என்கிறான்.
    போரினைத் தடுக்க அதற்கு கருத்துக்கூறியே ஆகவேண்டும் என கிருஷ்ணன் வலியுறுத்த, "கர்ணனை மன்னனாக்கு; பீமனைக் கட்டிப்போடு; உன்னையும் கட்டிப்போட்டாகவேண்டும்" என்று பதிலளிக்கிறான் சகாதேவன். அதற்குக் கிருஷ்ணன், "ஒருவேளை மற்ற இரண்டும் நிறைவேற்றப்படலாம்; ஆனால் என்னை எப்படி கட்டிப்போடுவாய்" என்கிறார்.
   அதற்கு சகாதேவன், கிருஷ்ணன் உண்மையான உருவத்தை காண்பித்தால் தான்  கட்டிப்போடுவதாகக் கூறுகிறான். கிருஷ்ணன் தன் விஸ்வரூபத்தைக்  காண்பித்து சாகாதேவனுக்கு தன்னை கட்டியிடும் வலிமையையும் அளிக்கிறார். பின்னர் தன்னை விடுவிக்குமாறு அதே சகாதேவனை யாசிக்கிறார் கிருஷ்ணன். பாண்டவரின் வெற்றிக்கு கிருஷ்ணன் உறுதிகூற,  கிருஷ்ணனை விடுவிக்கின்றான், ஞானியாகிய சகாதேவன்.
{இந்து' ஆங்கில நாளிதழ் அக்டோபர் 30,2017, சமூகம்/ நம்பிக்கை[ Society/Faith] பத்தியில் வெளியான, "  Slave to a Devotee's Love" எனும் கட்டுரையின் தமிழாக்கம்'}
                                                                                         ப.சந்திரசேகரன் .  

No comments:

Post a Comment