மாயா!
முடிவில்லாக் கதைக்கு முடிச்சுகள் பலவாம்!
முடிச்சுகள் அவிழ்ந்திட மூலைக்கோர் முடிச்சாம்!
அவிழ்ந்ததோர் முடிச்சுகள் ஆளுக்கோர் திசைகாட்ட,
ஆள்காட்டி விரலுக்கு ஆனைபோல் வீக்கமாம்!
முண்டி யடித்து முறையிலாக் குற்றங்கள்,
கண்ட திசையெலாம் களவென புரிந்தோர்,
நண்டுப்பிடியிலும் நாளுக்கோர் நழுவலாம்;
இண்டு இடுக்கெல்லாம் இருட்டென இணைத்து,
குண்டுப் பெருச்சாளியாய் பெருக்கிய கொள்ளை,
தொண்டுப் பலனோ தோண்டிய குழியோ?
கெட்டும் கெடுத்தும் கட்டிய கோட்டை,
வெட்டிய குழியினுள் வீழ்ந்திடு மாயின்,
எட்டிய உயரம் கர்ப்பக்ரஹமோ காராக்ரஹமோ?
ப.சந்திரசேகரன் .
No comments:
Post a Comment